Published:Updated:

கைது ஆகிறாரா வீரபாண்டி ராஜா?

அடுத்த சிக்கல் ஆரம்பம்!

கைது ஆகிறாரா வீரபாண்டி ராஜா?

அடுத்த சிக்கல் ஆரம்பம்!

Published:Updated:
##~##

ப்பாவைப் போலவே மகனுக்கும் சிக்கல் ஆரம்பம்! 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை​யை அடுத்துள்ள காரியானூர், பசும்பலூர், கை.களத்தூர், பாதாங்கி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்களை, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவின் பெயரைப் பயன்படுத்தி, சேலத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் மோசடி செய்திருப்பதாக புகார். நிலத்தை மீட்டுத் தரவேண்டி, கடந்த 13-ம்தேதி வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதாங்கியைச் சேர்ந்த செல்வராஜ், ''ஒரு வாரத்துக்கு முன், நிலத்தில் பருத்தி எடுத்துட்டு இருந்தோம். அப் போது காரில் வந்த ஐந்து பேர், 'இந்த நிலங்களை எல்லாம் நாங்க வாங்கிட்டோம். இதுக்குப் பிறகு எதை யும் விதைக்காதீங்க’னு மிரட்டிட்டுப் போனாங்க'' என்றார்.

கைது ஆகிறாரா வீரபாண்டி ராஜா?

கைகளத்தூர் ராமர், ''எங்க அப்பா, எனக்கும் என் தம்பிகளுக்கும் மூன்று ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தார். அதைப் போன வருடம் ஜூன் மாசம் முறைப்படி பதிவு செய்தேன். ஆனால், ஜூலை மாதம் பெரியசீரகாபாடி தி.மு.க. பிரமுகர் கண்ணன் என்பவர் என் நிலத்தை​யும், அதைச் சுற்றியுள்ள ஒன்பது ஏக்கர் நிலங்களையும் வாங்கிய​தாகப் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது'' என்று பதறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கைகளத்தூர் ராஜு, ''எங்கள் நிலங்களை, மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான மகாதேவி ஜெயபால் என்பவரின் அண்ணன் தர்மலிங்கம், போலி ஆவணங்கள் மூலம் 350 ஏக்கர் நிலங்களுக்கு மேல், சேலத்தைச் சேர்ந்த கண்ணன் என் பவருக்கும், அம்மையகரம் சுகுமார் என்பவருக்கும் விற்பனை செய்திருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜாவின் பெயரைப் பயன்படுத்தித்தான் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்து மனு கொடுக்கப் போன ராஜவேல் என்பவர், ஆர்.ஐ. மாயக்கிருஷ்ணனின் தலையில் தட்டியதாகப் புகார் எழவே, விவசாயி​களுக்கு எதிராக வருவாய்த் துறையினரும் போராட்​டத்தில் குதித்தனர்.

அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ''ஆர்.ஐ. கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்து, மூவரைக் கைது செய்துள்ளோம். ராஜவேல் என்பவரைத் தேடி வருகிறோம். நில மோசடி குறித்து விசாரணை நடக்கிறது'' என்றார்.

வீரபாண்டி ராஜாவிடம் கேட்டபோது, ''நானே எங்க அப்பாவை இழந்த வேதனையில் இருக்கிறேன். எதற்காக என் மீது இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சொல்கிறார்கள் என்று தெரிய​வில்லை. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

- வீ.கே.ரமேஷ், சி.ஆனந்தகுமார்

படம்: எம்.ராமசாமி