Published:Updated:

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

கபாலீஸ்வரர் கோயில் கலாட்டா!

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

கபாலீஸ்வரர் கோயில் கலாட்டா!

Published:Updated:
##~##

ருவறை நுழைவுப் போராட்டம் பெரும் கலகத்துக்கு வித்திடும் போல் தெரிகிறது! 

'தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி, மயிலாப்பூர் கபா லீஸ்வரர் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்’ என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருக்கிறது. இந்தப் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் எதிர்ப்பு தெரிவிக்க... கருவறை நுழைவுப் பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்​தினர் செய்துள்ள சுவர் விளம்பரங்​களை, தமிழ்நாடு இந்து மகா சபாவினர் அழித்து வருகின்றனர். சுவர் விளம்பரங்கள் மீது நாமத்தை வரைவதும், 'ஓம்’ என்று எழுதுவதுமாக இருக்கின்றனர். அதோடு, கருவறை நுழைவு விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடக்கும்

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

இடங்களில்  எதிர்ப்பு ஆர்ப்​பாட்டம் நடத்துகின்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான எஸ்.துரைசாமியைச் சந் தித்தோம். ''நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்​பட்டு விட்டது என்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தெரியும்படியாக கோயில் கருவறைக்குள் இன்றும் தீண்டாமை தொடர்கிறது. ஜனாதிபதி பதவி முதல் எந்தப் பதவிக்கும் எந்தச் சாதியினரும் வரலாம். ஆனால், கோயில் அர்ச்சகராகக் குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் வர முடியும். எனவே, அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவில் 'தீண்டாமை ஒழிப்பு’ என்பதற்குப் பதிலாக 'சாதி ஒழிப்பு’ என்ற திருத்தத்தைச் செய்ய வலியுறுத்தித்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்துகிறோம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1970-ல் அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டு ​வரப்பட்டது. 1978-ல் எம்.ஜி.ஆர். அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழி முறைகளைக் கண்டறிய ஓய்வுபெற்ற ஒரு நீதிபதி தலை மையில் குழு அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா அரசும் வேத ஆகமக் கல்லூரிகள் அமைத்து 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்தது. ஆனால், இதுவரை யாரையும் அர்ச்சகராக நியமிக்க​வில்லை.

பெரியாருக்குப் பிறகு சாதி ஒழிப்புக்கு எந்த அரசியல் இயக்கமும் தீவிரமாக செயல்படவில்லை. அவரது பெயரைச் சொல்லும் கட்சிகள்கூட, சாதியை மையமாக வைத்துத்தான் அரசியல் நடத்து​கின்றன. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அனைத்துச் சாதியின ரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.'' என்று சூளுரைத்​தார்.

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

பொதுச் செயலாளர் கோவை ராம​கிருஷ்ணன், ''நாங்கள் போராட்டம் நடத்தும் அதே நாளில், தமிழ்நாடு இந்து மகாசபா சார்பில், 'கோயில் கருவறைப் புனிதம் காப்​போம். சிறப்பு பூஜைகளுக்கு அனைத்து இந்து மக்களும் திரண்டு வாரீர்’ என்று அழைப்பு விடுத்துள்ளனர். கருவறைக்குள் சென்று அவர்கள் பூஜை செய்தால், எங்களுக்கு மகிழ்ச் சிதான். கடவுள் இல்லை என்று சொல்கிற எங்களைவிட, கடவுள் உண்டு என்று சொல்கிற நீங்களே கருவறைக்குள் செல்லுங்கள்; பூஜை செய்யுங்கள்; வரவேற்போம். அதுதான் எங்கள் போராட்டத்துக்கான வெற்றி. கருவறைக்குள் செல்ல உங்களுக்கு அனுமதி கிடைத்​தால், இந்தப் போராட் டத்தை இன்றே நிறுத்தி விடுவோம்'' என்றார்.

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயிடம் பேசினோம். ''24-ம் தேதி வைகுண்ட ஏகாதசி. இந்துக்களின் புனித நாள். அன்று, மயிலை கபாலீஸ்வரர் கோயில் கருவறைக்குள் வருவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து உள்ளனர். கடவுள் இல்லை என்பவர்களுக்கு கோயிலில் என்ன வேலை? நுழைந்தால் தக்க பதிலடி கொடுப்போம். கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றால், கல்லறைக்குள் நுழைந்து விடுவாய் என்று எச்சரிக்கிறோம். கருவறை நுழைவுப் போராட்டம் அன்று கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்'' என்று ஆவேசப்​பட்டார்.

கருவறைக்குள் நுழைந்தால், கல்லறைக்குள் நுழைவாய்!

டிசம்பர் 24-ம் தேதி அன்று வை குண்ட ஏகாதசித் திருநாள் என்பதால், பக்தர்களின் மனம் புண்படக் கூடாது... பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, போலீஸார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அன்றுதான் எம்.ஜி.ஆர். நினைவு நாளும் என்பதால் போலீஸுக்கு ஏக டென்ஷன்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்