Published:Updated:

அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு!

ஓ.ராஜா சொல்லும் அதிர்ச்சிக் காரணம்!

அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு!

ஓ.ராஜா சொல்லும் அதிர்ச்சிக் காரணம்!

Published:Updated:
##~##

'இது, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு’ என்று எதிர்க் கட்சியினர் வழக்கமாகப் பாடும் பல் லவியை, ஆளும் கட்சியினரும் பாடுவதுதான் தேனி விநோதம். 

தலித் இளைஞர் நாகமுத்துவைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, வி.எம்.பாண்டி, சிவகுமார், லோகு, சரவணன் உள்ளிட்ட ஐந்து பேரின் சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த மனுவில், 'நாகமுத்துவின் தற்கொலையில் ஓ.ராஜா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் நேரடி​யாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஓ.ராஜாவைத் தவிர்த்த மற்ற நான்கு பேரும் கைலாசநாதர் கோயில் பாதுகாப்பு கமிட்டியில் இருக்​கிறார்கள். அவர்களுக்கு எதிராக அரசியல் எதிரிகளின் தூண் டுதலின் பேரில் பொய்ப் புகார் ஒன்றை நாகமுத்து கொடுத்திருந்தார். இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரணைக்காக போலீஸார் அழைத்ததால்தான் தற்கொலை செய்து​கொண்டதாக இறப்பதற்கு முன் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள் ளது. முதலில் சந்தேக மரண​மாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கு, பின்னர் தற்கொலைக்குத் தூண் டியதாக மாற்றப்பட்டது. இந்த வழக்கு ராஜாவின் அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் போடப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு!

நாகமுத்துவை சாதி ரீதியாகத் துன்புறுத்திய​தாக கூறப்படும் புகாரும் நம்பத் தகுந்ததாக இல்லை.

அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு!

காரணம், புகார் கூறப் பட்டுள்ள சிவகுமார், லோகு, சரவணன் ஆகிய மூன்று பேருமே நாகமுத்து சார்ந்த அதே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், ஐந்து பேரும் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கத் தயாராக இருப்பதால், அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கும்படி வேண்டுகிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய ஓ.ராஜாவின் வழக்கறிஞர் காந்தி, 'ஒருவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டாலே, உடனே அவர் மீது 306-வது சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. குடும்பச் சண்டையின்போது, 'நீ செத்துத் தொலை’ என்று கணவன் கோபத்தில் கூறியதால், 'என் சாவுக்குக் காரணம் என் கணவர்தான்’ என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தார் ஒரு மனைவி. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த​போது, தற் கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. ஒருவர் செய்த செயலுக்கும், மற்றொருவர் தற்கொலை செய்ததற்கான வலுவான காரணத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.

நாகமுத்து எழுதியதாகக் கூறப்​படும் கடிதத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்ததாகவும், போலீஸ் விசா ரணைக்குக் அழைத்ததாகவும் கூறி இருக்கிறார். அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்ததற்கு, ஓ.ராஜா காரண​மாக இருக்க முடியாது. நாக​முத்து ஒரு பிரச்னையை

அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்கு!

எதிர்கொள்ளத் தெரியாதவராக அல்லது பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கலாம்' என்றவர், அரசியல் வழக்கு என்று சொல்வதற்கும் காரணம் சொன்னார். 'இது, அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் போடப்பட்ட பொய் வழக்கு என்றுதான் கூறுகிறோம். ஓ.ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருக்கிறார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கிறார். அவரது நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது அர சியல் எதிரிகள் திட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள். எனவே, அமைச்சர் ஓ.பி.எஸ். மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தவறான குற்றச்சாட்டுக்களைப் பரப்புபவர்கள் மீது வெகு விரைவில் மான நஷ்ட வழக்குத் தொடர இருக் கிறோம்'' என்றார்.

இந்த வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் கிடைத்ததைக் கண்டு போராட்டக்காரர்கள் அதிர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், 'இந்தப் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்தே காவல் துறையினர் அத்துமீறி நடந்துகொள்வதாக நாக முத்து கூறிவந்தார். இதுபற்றி எஸ்.பி., கலெக்டர், டி.ஜி.பி. வரை புகார் கூறி இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கும்போதே நடவடிக்கை எடுக் காத காவல் துறை, இறந்த பிறகு மட்டும் நடவ டிக்கை எடுக்கவா போகிறது? நாகமுத்துவின் தற்கொலைக்குக் காரணமான தமிழகக் காவல் துறையே, விசாரணை செய்து நீதி வழங்கும் இடத்தில் இருப்பது சரியாக வராது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி விரைவில் வழக்குத் தொடர இருக்கிறோம்.

இந்தப் பிரச்னையில் அரசியல் காழ்ப்பு உணர்வு கிடையாது. ஓ.ராஜாவுக்கு எதிராக, தி.மு.க-வோ, காங்கிரஸோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுமோ போராடவில்லை. பாதிக்கப்​பட்டவரின் குடும்பத்தினரும், பொது மக்களும்தான் போராடுகிறார்கள். எனவே, இந்த வாதம் எடுபடாது'' என்றார்.

இன்னும் என்னென்ன திருப்பமோ?

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து