Published:Updated:

மீண்டும் ஒரு காதல் கொலை!

கடலூர் பதற்றம்

மீண்டும் ஒரு காதல் கொலை!

கடலூர் பதற்றம்

Published:Updated:
##~##

மிழகத்தில் காதல் கொலைகளின் எண்ணிக்கையும் கௌரவக் கொலைகளின் எண்​ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த ​​​வண்ணம் இருக்​கின்றன. கடலூர் மாவட்டம் கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணனின் படுகொலையும் அந்த வகைதான்!

 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த துர்கா தேவியும் தனியார் கல் லூரியில் படித்தனர். ஒரே கல்லூரியில் படிப்பவர்கள் என்ற முறையில் ஒரே பேருந்தில் சென்று வரும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. கடந்த 12-ம் தேதி, துர்கா ​தேவியின் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, கோபால கிருஷ்ணன் சந்திக்க வந்திருக்கிறார். அதன்பிறகு கோபால கிருஷ்ணனைக் காணவில்லை. எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. போலீஸில் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் ஒரு காதல் கொலை!

இந்த நிலையில்தான் கடந்த 19-ம் தேதி, கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் வெள்ளிங்குடி ஓடையில் கோபால கிருஷ்ணனின் உடல் கண்டு​பிடிக்​கப்​பட்டது. போலீஸாரின் மெத்தனப்​போக்கைக் கண்டித்தும், குற்றவாளி​களை உடனே கைது செய்யக் கோரியும் கோபால​ கிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சாலை மறியல் நடத்தினர். அந்தப் பக்கம் வந்த பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. அதன்பிறகும், ஆவேசம் அடங்காதவர்கள், துர்கா ​தேவியின் பெரியம்மா காந்தி​​மதியின் வீட்டுக்குத் தீ வைத்த​​தாகக் கூறப்படுகிறது. கோபால கிருஷ்ணனின் அம்மா வனசுந்தரியைச்சந்தித்​தோம். ''நாலு பிள்ளையில் இவன் மட்டும்தான் ஆம் பிளைப் புள்ளை. அதனால ரொம்​பவும் செல்​லமா வளர்த்தோம். கடைசியில இப்படி ஆயிடுச்சே. இது படிச்சு எங்க குடும்பத்தையும் மத்த பொம்பளைப் புள்ளைங்களையும் கரை சேர்க்கும்னு நினைச்சோம். பாவிப் பசங்க, இப்படி அநியாயமாக் கழுத்தை அறுத்துக் கொன்னுட்​டானுங்களே...'' என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறினார்.

மீண்டும் ஒரு காதல் கொலை!

மகனின் உடல் அருகே கதறிக்​கொண்டு இருந்த அப்பா மாயகிருஷ்ண​னிடம் பேசினோம். ''காலேஜ் போ​னவன் எப்போதும்போல வீட்டுக்கு வந்துடுவான்னுதான் இருந்தோம். ரெண்டு நாளாத் தேடினோம். கிடைக்கலை. அப்பதான் அவனோட படிக்கிற ஒரு பொண்ணுகூட பழக்கம் இருக்கு. அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனான்கிற தகவல் கிடைச்சது.  அதுக்கப்புறம்தான் எங்களுக்குச் சந்தேகம் வந்துச்சு. ஏன்னா அந்தப் பொண்ணோட குடும்பத்துக்கும் பிரபு என்ற ரவுடிக்கும் ரொம்ப நெருக்கம். அவங்க மூலமா ஏதாவது ஆகி இருக்குமோனு பயந்துபோய், 14-ம் தேதியே சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ஆறுமுகசாமிகிட்ட புகார் கொடுத்தேன். பொண்ணோட அப்பா ரவி, பிரபு, அவங்களோட இருக்கிறவங்க பேரை எல்லாம் குறிப்பிட்டுத்தான் புகார் கொடுத்தேன். ஆனா, அவர் புகாரை வாங்காம, ஸ்ரீமுஷ்ணம் போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னார். அவங்க, சும்மாவாச்சும் பேருக்கு பிரபுவைக் கூப்பிட்டு விசாரிச்சுட்டு விட்டுட்டாங்க. அந்தப் பொண்ணை போலீஸ் கூப் பிட்டு விசாரிச்சப்ப, 'எங்கப்பா என் கை காலைக் கட்டி ரூம்ல போட்டுப் பூட்டிட்டு, கோபால கிருஷ் ணன் கையைப் பின் பக்கமாகக் கட்டி தோட்டத்துப் பக்கம் இழுத்துட்டுப் போனார்’னு சொல்லி இருக்கு. உடனே, பயந்துபோய் நீதிமன்றத்துல ஆட்கொணர்வு மனு போட்டோம். அன்னைக்கே சரியா விசாரிச்சு இருந்தா, குற்றவாளிகளைக் கட் டாயம் கண்டுபிடிச்சு இருக்கலாம்...'' என்று தலையில் அடித்துக் கொண்டார்.  

மீண்டும் ஒரு காதல் கொலை!

'கோபால கிருஷ்ணனை துர்காதேவியின் அப்பா ரவி, பிரபு உள்ளிட்ட 10 பேர்தான் கொலை செய்தனர்’ என்று வழக்குப் பதிவு செய்யும்படி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்ற வண்ணம் இருக் கின்றன. கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரையில் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டம் தொடரும் நிலையில், பா.ம.க-வைச் சேர்ந்த காடுவெட்டி குரு, ராமதாஸைக் கைது செய்யக் கோரியும் ஆங்காங்கே வன்முறை வெடிக்கிறது.

வழக்கை விசாரித்து வரும் சேத்தியாத்​தோப்பு டி.எஸ்.பி. ஆறுமுகசாமியைச் சந்தித்துப் பேசினோம். ''என்னால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இந்த ஏரியாக்களில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்புப் பணியில் இருக்கிறேன். இப் போதைக்கு இதுதான் முக்கியம்'' என்றார்.

அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுகளுக்கு அப்பாவிகள் பலியாவதே தொடர்கிறது!

- க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்