Published:Updated:

சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தனி குழு!

விகடன் விமர்சனக்குழு
சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தனி குழு!
சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தனி குழு!
சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தனி குழு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மோசடி குறித்து விசாரிக்க தனி குழு அமைத்துள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

இதுகுறித்து, சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் கூறுகையில், ''உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி குறித்து விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவுக்கு தலைவராக சி.பி.ஐ.யின் வடகிழக்கு பிரிவு இணை இயக்குனர் ராஜீவ் சிங் செயல்படுவார்.

மோசடி குறித்த விசாரணை வெளிப்படையாக அமைய வேண்டும் என்பதற்காகவே தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முறைகேடு தொடர்பாக அனைத்துவிதமான ஆவணங்களையும் திரட்டி, அதற்கு பிறகு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும்'' என்றார்.