Published:Updated:

உயிரைப் பறித்த ஈமு!

கொலைக்குக் காரணம் பணம்தானா..?

உயிரைப் பறித்த ஈமு!

கொலைக்குக் காரணம் பணம்தானா..?

Published:Updated:
##~##

மோசடிப் புகார், வழக்கு, கடத்தல் என்று பல பரிமாணங்களைத் தொட்ட ஈமு கோழி விவகாரத்தில் இப்போது கொலையும் நடந்துவிட்டது. 

திருப்பூர், நொச்சிப்பாளையத்தில் ஜோதி வேல் ஈமு ஃபார்ம்ஸ் நடத்திவந்தவர் மோகன். ஈமு கோழி மோசடி தொடர்பாக இவர் மீது ஏராளமானோர் புகார் செய்தனர். உடனே, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்குவதாக அறி வித்தார் மோகன். பணம் வந்துவிடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில், கடத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் மோகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 10-ம் தேதி பல்லடம் அருகே கடத்தப்பட்ட மோகனை, பெங்களூரு அருகே சடலமாகக் கண்டெடுத்து இருக்கிறது போலீஸ். வழக்கின் விசாரணை அதிகாரியான பல்லடம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நடந்த சம்பவங்களை நம்மிடம் விளக்கினார். ''மோகனின் கார் டிரைவர் கொடுத்த

உயிரைப் பறித்த ஈமு!

தகவலின் அடிப்படையில், பெருந்துறையைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மோகனசுந்தரத்தை முதலில் பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது, ஃபைன் ஃப்யூச்சர் நிதி நிறுவனத்தில் ஏமாந்த அவரது நண்பர்கள் ஆறு பேரை அடையாளம் காட்டினார். அவர்களையும் பிடித்து விசாரித்தோம். 'ஃபைன் ஃப்யூச்சர் நிதி நிறுவனத்தில் எங்களுக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் வசூலித்து 18 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தோம். அவர்கள் திடீர் என ஓடிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால், யாரையாவது கடத்திப் பணம் பறிக்கத் திட்டம் போட்டோம். ஈமு கோழி முதலீட்டாளர்களிடம் பெருமளவு பணம் வசூலித்து மோகன் கோடீஸ்வரனாக இருந்தார். அதனால், அவரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்தோம். மோகன் காரில் வந்துகொண்டு இருந்தபோது, வழிமறித்து அவரைக் கடத்தினோம்.

மோகனை காரில் கொண்டுபோகும்போது, அவர் சத்தம் போட ஆரம்பித்தார். சத்தம் போடா​மல் இருக்க, அவரின் வாயைப் பொத்தி, கழுத்தை அழுத்திப் பிடித்தோம். அதில் அவர் இறந்துவிட்டார். உடலை இங்கே வீசினால், மாட்டிக்கொள்வோம் என்பதால், பெங்களூருவுக்குக் கொண்டுசென்றோம். சென்னப்பட்டினா என்ற இடத்தில் மோகன் உடலை வீசினோம்’ என்று சொன்னார்கள்.

மோகனின் சடலத்தை, அடையாளம் தெரியாத பிணம் என்று முடிவுசெய்து கர்நாடகா போலீஸார் அடக்கம் செய்துவிட்டனர். மோகனசுந்தரம் சொன்ன தகவலை அடுத்து பெங்களூருக்குச் சென்ற நாங்கள், புதைக்கப்பட்ட மோகனின் உடலைத் தோண்டி எடுத்தோம்'' என்று சொன்னார்.

இந்த விவகாரத்தில் மோகனசுந்தரம் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்து இருக்கிறார்கள். அத் துடன் கூலிப்படையைச் சேர்ந்த மூவரைத் தேடி​ வருகிறார்கள்.

உயிரைப் பறித்த ஈமு!

மோகன் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களோ, ''பணம் கேட்டுக் கடத்தி இருந்தால், வீட்டுக்குப் போன்செய்து மிரட்டி இருப்பார்கள். அப்படி யாரும் போன் செய்யவே இல்லை. ஃபைன் ஃப்யூச்சர் நிறுவனத்தில் ஏமாந்தவர்கள், ஈமு கோழிப் பண்ணை அதிபரைக் கடத்தினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. இதில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அதனை போலீஸார் விசாரிக்க வேண்டும்'' என்கிறார்கள்.

உயிரைப் பறித்த ஈமு!

கடந்த அக்டோபர் மாதமும் மர்ம நபர்களால் மோகன் கடத்தப்பட்டாராம். என்ன காரணத்​தாலோ, கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார். அப்போது, 'எனக்கு அடிக்கடி மிரட்டல்கள் வருகின்றன. என்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பித்தர நான் தயாராக இருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் என்னை மிரட்டிவரும் நபர்கள் என்னையும் என் குடும்பத்​தினரையும் கொலை செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. என் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்று ஒரு புகாரை போலீஸாரிடம் கொடுத்து இருக்கிறார் மோகன். அப்போதே போலீஸார் இந்த விஷயத்தில் அக்கறைக் காட்டி இருந்தால், மோகனின் கொலையைத் தடுத்து இருக்கலாம் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

மோகன் கொடுத்த புகாரில், திருப்பூரில் உள்ள டி.வி. நிருபர் ஒருவரும் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அவரிடம் இப்போது விசாரணையைத் தொடங்கி இருக்கிறது போலீஸ்.

மோகன் கொலை செய்யப்பட்டது, ஈமு கோழி அதிபர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- ச.ஜெ.ரவி