''அனைத்து ஊழல் வழக்குகளையும் விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம்

. அமைக்க வேண்டும். அந்த விசாரணைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்பட வேண்டும்!'' - ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சொல்வதைக் கேட்டு, அத்தனை ஊழல்வாதிகளுக்கும் வயிற்றில் புளி கரைத்திருக்கிறது!.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே.கங்குலியும், ஜி.எஸ்.சிங்வியும் இன்று அகில இந்தியாவே உற்றுநோக்கும் பிரபலங்களாகி விட்டார்கள். இவர்களிடம் கடந்த 10-ம் தேதி, 2ஜி தொடர்பான முறைகேடு குறித்த அறிக்கையை சி.பி.ஐ. முதன் முதலாகத் தாக்கல் செய்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர், கடந்த ஓர் ஆண்டு காலமாக விசாரித்த விவரங்களின் சாராம்சம் அந்த அறிக்கையில் இருந்தன. இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

''இதுவரை நாலு பேரைத்தான் கைது செய்துள்ளீர்கள். அலைவரிசையில் பலன் அடைந்தவர்கள்

மொத்தம் எத்தனை பேர்? யார் யார் அவர்கள்? உண்மையான சதிகாரர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?'' என்று கேட்ட நீதிபதிகள், ''இவர்களுக்கெல்லாம் சம்மன் அனுப்புவது மட்டுமே போதுமானதா?'' என்றும் கேட்டார்கள். ''முன்னாள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?'' என்பது நீதிபதிகள் அடுத்துக் கேட்ட கேள்வி. ''அவர் கைது செய்யப்பட்டுள்ளார்!'' என்றார் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். அதைக் காதில் வாங்கியபடியே அறிக்கையைப் படித்தார்கள் நீதிபதிகள். 'ஷாகித் பால்வாவிடம் செய்யப்பட்ட விசாரணையில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுத்ததற்குப் பிரதிபலனாக சில முதலீடுகள் பெறப்பட்டு, அது ஆ.ராசாவுடைய அரசியல் தலைவருக்குச் சொந்தமான டி.வி-க்குக் கொடுக்கப்பட்டு உள்ளது’ என்ற தொனியிலும் அந்த அறிக்கையில் சில வாசகங்கள் இருந்தன.

நீதிபதிகள், ''இதில் மேலும் விவரங்களைப் பெறுங்கள். ஓரிரு நாட்களில் உங்களால் விசாரிக்க முடியவில்லை என்றால், கைதானவர்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் கஸ்டடியில் எடுத்து, இதில் உள்ள உண்மைகளைப் பெற வேண்டும். எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிக்கொண்டு வரவேண்டியதுதான் முக்கியம்!'' என்று சொல்லி இருக்கிறார்கள்.

''ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் நாட்டின் எந்த நீதிமன்றங்களிலும் இந்த வழக்கு சம்பந்தமான எந்த உத்தரவையோ, சி.பி.ஐ. விசாரணைக்கு வேறு எந்தத் தடங்கலையோ செய்ய அனுமதி இல்லை!'' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ''வேறு எந்த நீதிமன்றத்திலும் இணை விசாரணை கிடையாது!'' என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். நீதிபதிகள் இப்படி சி.பி.ஐ-க்குக் கொடுத்த அலர்ட், இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள அரசியல் வட்டத்தை மட்டுமல்ல... சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிவிடலாம் என்று நினைக்கும் மற்ற தொழில் அதிபர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த், ''ஸ்வான் டெலிகாம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு நேரடியாகப் பல தொடர்புகள் இருக்கின்றன. அவரை விசாரிக்காமல் தாமதிக்கிறது சி.பி.ஐ.'' என்று சுட்டிக்காட்டினார். அதற்கும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கண்டிப்போடு, ''இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பட்டியல் நீளமாக இருக்கிறது. ஆனால், அவர்களோ தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று நினைக்கின்றனர். அவர்கள் மில்லியனர்களோ பில்லியனர்களோ... யாரானாலும் அதைப்பற்றி கவலை இல்லை. அவர்களையும் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பெற்று பயனடைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்!'' என்று எச்சரித்தார்.

''ஆ.ராசா சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதன் வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் காட்டிவிட்டு, விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்!'' என்ற நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு வக்கீலிடம் கருத்துக் கேட்டார்கள்.

''சி.பி.ஐ-யின் அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் எங்களிடம் மட்டுமே அவர்கள் பதில் கூற கடமைப்பட்டவர்கள்!'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கறாராகச் சொல்லி இருக்கிறார்கள்.

''எங்களது கைகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டன. அடுத்து வரும் நாட்களில் சி.பி.ஐ. காட்டப் போகும் அதிரடிகள் பலமானதாக இருக்கும்!'' என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் கலைய.... இந்தப் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்த வக்கீல் தரப்பும் சந்தோஷமாகக் கலைந்தது!

சி.பி.ஐ. மனுவில் கலைஞர் டி.வி.!

ஆ.ராசாவுக்கு காவல் நீட்டிப்பு வேண்டி சி.பி.ஐ. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 4-வது பகுதியில், 'ஆ.ராசாவால் ஆதாயம் பெற்ற நிறுவனங்களுள் ஸ்வான் டெலிகாமும் ஒன்று. மேலும், 2009-ம் ஆண்டில் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு

214 கோடி பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி என்பது ராசாவுக்கு நெருங்கிய பலருக்கு சொந்தமானது. சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஷாகித் பால்வாவும், அவரது குடும்பத்தினரும் இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் உள்ள டிபி குரூப் நிறுவனங்களில் இருந்து பணத்தை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆ.ராசா சுற்றுச் சூழல் துறைக்கு அமைச்சராக இருந்த காலத்திலேயே 'பில்டிங்' பால்வாவுக்கு அறிமுகம் என்று கடந்த இதழில் கூறியிருந்தோம். தற்போது, சி.பி.ஐ. கஸ்டடியில் இருக்கும் ஷாகித் பால்வா... சுற்றுச் சூழல் துறையில் தனது தொடர்புகள் என்னவெல்லாம் இருந்தன என்பதைக் கூறியிருப்பதோடு, ஆ.ராசாவின் நிழலான தமிழக புள்ளி சாதிக் பாட்சாவுடன் 2006-ம் வருட வாக்கிலேயே எப்படியெல்லாம் தனக்குப் போக்குவரத்து இருந்தது என்பதை கூறியிருக்கிறாராம். அதன்படி பார்க்கும்போது, 'கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' மற்றும் 'ஈகுவாஸ் எஸ்டேட்ஸ்' ஆகிய பெயரிலான கம்பெனிகளின் நிர்வாக இயக்குநராக உள்ள சாதிக் பாட்சாவுக்கு சிக்கல் மேலும் பன்மடங்கு வலுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்களே கூறத் தொடங்கியுள்ளன.

- சரோஜ் கண்பத்