Published:Updated:

` பொய் குற்றச்சாட்டு என்னை கடுமையாக பாதித்தது’ - பாலியல் புகார் அளிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

அந்தப் பெண்ணின் பொய்க் கூற்றுகள் என் சுயமரியாதையையும், மனநிலையையும் கடுமையாக பாதித்தன.

` பொய் குற்றச்சாட்டு என்னை கடுமையாக பாதித்தது’ - பாலியல் புகார் அளிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

அந்தப் பெண்ணின் பொய்க் கூற்றுகள் என் சுயமரியாதையையும், மனநிலையையும் கடுமையாக பாதித்தன.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

உத்தரப்பிரதேசத்தில் 28 வயது இளைஞர் ஒருவர், தான் ஒரு பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டேன் என்றும், தன்னுடைய தற்கொலைக்குச் சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் குடும்பத்தினரும்தான் காரணம்வும் என வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த  அக்டோபர் 8-ம் தேதியன்று, பிலிபிட் மாவட்டத்திலுள்ள பௌரியாவில், இளைஞர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அந்த வீடியோவைப் பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை

மேலும், இது பற்றி ஊடகங்களில் வெளியான தகவலின்படி வீடியோவில், ``அந்தப் பெண்ணைக் காதலித்தேன், ஆனால் அவளுடன் ஒருபோதும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் நானே அவளை நிராகரித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து செப்டம்பர் இறுதியில் அவள் என்மீது போலீஸில் புகாரளித்தாள். அதனால் எங்கு கைதுசெய்யப்படுவோமோ என்ற பயத்தில், ஒரு வாரத்துக்கும் மேலாகக் கரும்புத் தோட்டத்தில் நான் தலைமறைவாக இருந்தேன். அந்தப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டு என் சுயமரியாதையையும் மனநிலையையும் கடுமையாக பாதித்தன" எனத் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் கூறியிருந்தார்.

தற்கொலை
தற்கொலை

இது குறித்து போலீஸில் புகாரளித்த இளைஞரின் தந்தை, ``அந்தப் பெண் என் மகனை பிளாக்மைல் செய்துகொண்டிருந்தாள். இதனால், என் மகன் மிகவும் மன அழுத்தத்திலிருந்தான். அதுமட்டுமல்லாமல் வீடியோ மற்றும் தற்கொலைக் குறிப்பு, அக்டோபர் 11 அன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் வேறு வழியின்றி நான் அதை வெளியிட்டேன்" என்று கூறினார்.

வழக்கு பதிவு
வழக்கு பதிவு

அதைத் தொடர்ந்து இளைஞரின் தந்தை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த பிலிபிட் போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்)-ன் கீழ் சம்பந்தப்பட்ட பெண் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ரோஹித் குமார், ``இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்துவருகிறோம்" என நேற்று தெரிவித்தார்.