'அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம்?’ என்பதைவிட, 'அடுத்த நொடி

. உயிருடன் இருப்போமா? மகள் கற்பு காக்கப்படுமா? மனைவி வீட்டில்தான் இருப்பாளா?’ என்ற தவிப்புகளை மணிப்பூரில் ஒவ்வொரு தகப்பனின் முகத்திலும், கணவனின் முகத்திலும் காணலாம்! பள்ளிக்கூடங்கள் இல்லை, பேருந்து நிலையங்கள் இல்லை, ரயில் நிலையங்கள் இல்லை என்று ஏகப்பட்டவை இல்லை என்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறது ராணுவம்..
'இவர்கள் நம்மைப் பாதுகாப்பதற்கு அல்ல... படுகொலை செய்யவே நிற்கிறார்கள்!’ என்றுதான் ஒவ்வொரு மணிப்பூர்வாசியும் நினைக்கிறார்கள். இவர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்த ஐரோம் ஷர்மிளா, 11-வது ஆண்டாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய மனோரமா, கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்!

கண்ணீரில் மிதக்கும் மணிப்பூரின் சோகத்தை 45 நிமிட நாடகமாக்கி, நாடு முழுவதும் நடத்திவருகிறார் ஓஜஸ் புனே. கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச்சேர்ந்த இவர், தனியரு மனுஷியாக நாடகம் போட்டு அரங்கத்தைக் கட்டிப் போடுகிறார். நாடகம் முடித்த கையோடு கண்களில் கசியும் கண்ணீர்த் துளிகளை அடக்கியபடி கேள்விகளுக்கு பதிலளித்தார்.

''தனி ஒரு பெண்ணாக நாடு முழுவதும் பயணம் செய்து நாடகம் போடும் எண்ணம் தோன்றியது எப்படி?''

''என்னுடைய பெற்றோரும் இது போன்ற பல கொடுமையான சூழல்களையெல்லாம் தாண்டி வந்தவர்கள்தான். அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் பயந்து வாழ்வதை நான் விரும்பவில்லை. 'இந்தியா’ என்றால் தாய்த் திருநாடு, நானும் இந்தியன் என்று கிரிக்கெட்டிலும், சுதந்திர தினத்தன்றும் மட்டுமே உணர்ச்சி பொங்கக் கூவுவது உங்களைப் பொறுத்தவரை நன்றாக இருக்கலாம். ஆனால், உண்மையில் மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளை, ராணுவத்தால் மக்கள் படும் வேதனைகளை சொல்லால் எழுதிப் புரிந்து கொள்ளவே முடியாது. நாடகத்தின் மூலம் ஓரளவாவது விளக்க முடியும் என்றுதான் மேடை நாடகங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். கடந்த மே மாதத்தில் இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன். என் மக்களுக்கு என்று நல்வாழ்வு கிடைக்கிறதோ... அன்று வரை நான் இப்படியே பயணத்தில் இருப்பேன்!''

''மணிப்பூரில் என்னதான் நடக்கிறது?''

''மணிப்பூர் பல்வேறு ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 'நிலப்பரப்பைப் பாதுகாக்கிறோம்’ என்று உள்ளே நுழைந்த ராணுவம் அங்குள்ள பெண்களைத் தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வருவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதை எதிர்க்கும் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். மணிப்பூரில் நடப்பது முழுக்க முழுக்க ராணுவத்தின் ஆட்சிதான். பொது மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால், சட்டத்தை யார் மதிக்கிறார்கள்? எங்கள் பிரச்னையை நீங்கள் உணர மறுத்தால், எதிர்காலத்தில் உலக வரைபடத்தில் மணிப்பூர் மாநிலமே அழிந்து போய்விடும். இதுதான் யதார்த்தமான நிலைமை!

2004-ம் ஆண்டு மனோரமா கொலை செய்யப்பட்டார். அவர் தப்பிச் சென்றதால்தான் சுட்டுக் கொன்றோம் என ராணுவம் கூறியது. தப்பித்து செல்கிறார் என்றால் பின்பக்கம் அல்லவா குண்டு பாய்ந்திருக்க வேண்டும்? ஆனால், துப்பாக்கி குண்டுகள் அவர் மார்பை அல்லவா துளைத்திருக்கிறது? மனோரமாவை பலாத்காரம் செய்து அதன் பிறகு சுட்டுக் கொன்றார்கள் என்பதுதான் உண்மை!

இந்த நிகழ்வால் கொதித்துப்போய் நிர்வாணப் போராட்டத்தை மணிப்பூர் பெண்கள் நடத்தினார்கள். ஒரு பெண்ணின் உச்சபட்ச தியாகமான உடலைக் கூட வீதியில் காட்டி நாங்கள் போராடினோம். அப்போதும் பெண்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினார்கள். வன்முறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது சுட்டார்கள். இன்று மணிப்பூரில் நாளன்றுக்கு 2 பெண்கள் ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாராவது ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்து கொண்டிருக்கலாம். ஆயுதப் படைகளின் அத்துமீறல்களில் இருந்து மணிப்பூரை விடுவிப்பதுதான் எங்களது ஒரு வரி முழக்கம்.''

''உங்களுடைய பிரசாரத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?''

''மனோரமா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை அடுத்த நாள், ஒரு ஆங்கில நாளிதழ் தனது ஐந்தாவது பக்கத்தில் சின்ன பாக்ஸ் செய்தியாகத்தான் வெளியிட்டது. ஆனால், எங்கள் பிரசாரம் அனைவர் மனதையும் மாற்றி வருகிறது. பெங்களூருவில் ஒரு கல்லூரி மாணவர்கள் என்னுடைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, 'நார்த் ஈஸ்ட் ஸ்பீச் அவுட் டாட் காம்’ என்ற இணையதளத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்ய முன்வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் இந்த ஆதரவு பெரும் புயலாக எழுந்து வரும். நீங்களும் என்னோடு கைகோப்பீர்களா?'' கேள்வி கேட்கிறார் ஓஜஸ் புனே!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: வீ.நாகமணி