Published:Updated:

வன்கொடுமைக்கு சிறப்பு நீதிமன்றம்

சீரியஸ் கோரிக்கை

வன்கொடுமைக்கு சிறப்பு நீதிமன்றம்

சீரியஸ் கோரிக்கை

Published:Updated:
##~##

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட சிலர், தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்துக் கேள்வி எழுப்பும் நிலையில், 'வன்கொடுமைத் தடுப்புச் சட் டம் முழுமையாகவும் சரியாகவும் அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று’ என, நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் சமூக ஆர்வலரான அ.நாராயணன். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.நாராயணன் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்​கொண்ட தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச், 'தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.நாராயணனிடம் பேசி​னோம். ''எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் பிரிவு 14-ன்

வன்கொடுமைக்கு சிறப்பு நீதிமன்றம்

படி, மாநிலத்தின் அனைத்து மாவட்​டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இந்த அறிவிப்பு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்தொகைதான் 19 சத விகிதமாக உள்ளது. அவர்கள் தமிழகம் முழு வதும் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் வடக்கு, வடமேற்கு, மேற்கு மாவட்டங்களில் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆனால், அங்கு சிறப்பு நீதிமன் றங்களோ சிறப்புக் காவல் நிலையங்களோ அமைக்கப்​படவில்லை. 50 மாவட்டங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 43 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உத்தரப் பிர தேசத்தின் 71 மாவட்டங்களில் 40, ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில் 25, குஜாராத்தின் 26 மாவட்டங்களில் 19 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, ஆந்திராவில் உள்ள 23 மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சமூகநீதி பேசும் தமிழகத்தில், வெறும் நான்கு மாவட் டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் இருப்பது வேதனை.

வன்கொடுமைக்கு சிறப்பு நீதிமன்றம்

கடந்த ஆண்டு, மத்திய சமூக நீதித் துறைக்கு தமிழக அரசு அனுப்பி உள்ள அறிக்கையில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வன்கொடுமைக்கு ஆளாகக்கூடிய பகுதிகள் என்று அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்த 28 மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உடனடியாகச் சிறப்பு நீதி மன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களை அமைத்து, பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு நீதியும் நஷ்டஈடும் தாமதப்படாமல் கிடைக்க வேண்டும்'' என்றார்.

அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

- சா.வடிவரசு