Published:Updated:

தனி நீதிமன்றம் அமையுமா?

அச்சத்தில் கிரானைட் புள்ளிகள்

தனி நீதிமன்றம் அமையுமா?

அச்சத்தில் கிரானைட் புள்ளிகள்

Published:Updated:
##~##

கிரானைட் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்​காக தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி மேலூர் சோமசுந்தரம் என்பவர் கடந்த 18-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுதான், ''அனைவரையும் 'வளைத்து விட்டோம்’ '' என்று ஆர்ப்பாட்டம் செய்து​ கொண்டு இருந்த கிரானைட் புள்ளிகளுக்கு எனிமா கொடுத்திருக்கிறது. 

சோமசுந்தரம் தாக்கல் செய்த மனு கடந்த 2-ம் தேதி, நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'மூன்று வாரங்களுக்குள் அரசு பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும், அதற்கு முன்னதாக கிரானைட் வழக் குகளில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, அரசு வழக்கறிஞர் கோவிந்தன், தனி நீதிமன்றம் தேவை என்றோ, இல்லை என்றோ, எந்தக் கருத்தையும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனி நீதிமன்றம் அமையுமா?

தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார். அது கிரானைட் புள்ளிகளைக் கலக்கி விட்டது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சோமசுந்தரம், ''மேலூர் பகுதியில் இருந்த 73 கண்மாய்களை கிரானைட் கம்பெனிகள் கபளீகரம் செய்து விட்டதால், 20 ஆயிரம் ஏக்கர் பாழாகிப்போனது. கிராமக் கோயில்கள், தர்கா, சமணர் படுகைகளை இடித்து மூன்று மதத்தினரையும் காயப்படுத்தி இருக்கிறார்கள். குவாரிகளுக்காகத் தோண்டிய பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, மேலூர் பகுதியில் மட்டும் 70

தனி நீதிமன்றம் அமையுமா?

பேரை சாகடிச்சிருக்கு. மஞ்சள் காமாலை, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்பு​களுக்கும் இந்தக் குவாரிகள்தான் காரணம். வெட்டி எடுக்கப்பட்ட கற்களை மட்டுமே வைத்து இழப்​பீட்டைக் கணக்கெடுக்கிறார்கள். 20 வருடங்​களில் பல்லாயிரம் கோடிகளுக்கான கற்களைத் திருட்டுத் தனமாக வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தி இருக் கிறார்கள். அதையும் விசாரித்தால்தான் ஊழலின் மொத்தப் பரிமாணமும் தெரியும். இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எல்லாம் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், தனி நீதிமன்றம் அமைப்பதுதான் ஒரே தீர்வு. அதனால், 'தனி நீதிமன்றம் அமைக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என்று அரசு பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும். 'தனி நீதிமன்றம் தேவை இல்லை’ என்று சொன்னால், அதிகாரிகளுக்கும் கிரானைட் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வரும் வதந்தி உண்மையாகி விடும்'' என்றார்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்​ணனிடம் இந்த மனு குறித்து கேட்டதற்கு, ''கிரா னைட் ஊழல் வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு முனைப்போடு செயல்படுகிறது. தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக் கலாமா... வேண்டாமா என்பது, அரசின் கொள்கை முடிவு. மூன்று வாரங்கள் அவகாசம் இருப்பதால், அரசின் கருத்தைக் கேட்டு, பதிலை கோர்ட்டுக்குத் தெரிவிப்போம்'' என்றார்.

நல்ல பதிலாக இருக்கட்டும்!  

- குள.சண்முகசுந்தரம்                                          

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism