Published:Updated:

தள்ளாடிய புத்தாண்டு விற்பனை!

தொடரும் பொருளாதார மந்தநிலை!

தள்ளாடிய புத்தாண்டு விற்பனை!

தொடரும் பொருளாதார மந்தநிலை!

Published:Updated:
##~##

புத்தாண்டு தினத்தன்று பொருட்கள் வாங்கினால் வருஷம் முழுக்க பொருட்கள் வீட்டில் குவியும் என்ற நம்பிக்கையில் நகைக் கடைகளில் மக்கள் குவிவார்கள். அந்த சென்டிமென்ட் இந்த 2013 புத்தாண்டில் தகர்ந்து இருக்கிறது. முந்தைய ஆண் டை விட, சுமார் 30 சதவிகிதம் தங்கத்​தின் விற்பனை புத்தாண்டு தினத்தில் குறைந்து இருக்​கிறது.

 இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, ''இந்தப் புத்தாண்டிலும் தங்க நகைக் கடைகளில் கூட் டம் இருந்தாலும் விற்பனைதான் மந்தம். முந்தைய ஆண்டு 100 சவரன் விற்ற இடத்தில், இந்த ஆண்டு சுமார் 70 சவரன்தான் விற்று

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள்ளாடிய புத்தாண்டு விற்பனை!

இருக்கிறது. மின் தடை யால் பெரும்பாலான நிறுவனங்கள் மாதத்தில் பாதி நாட்கள் மட்டுமே இயங்கி வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம். பல நிறுவனங்களில் தீபாவளி போனஸ் தொகையைக் குறைத்து இருக்கிறார்​கள். வருமானம் குறைந்து போனதால், புது வருடத்தில் விற் பனையும் குறைந்துபோய் விட்டது. மின்சாரப் பிரச்னையால் மாநிலத்தில் விவசாயமும் சரிஇல்லை என்பதால், நகைகளை வாங்கு​வதற்கு பதில் அடமானம் வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்'' என்றார்.

வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் வசந்த​குமார், ''எங்களை பொறுத்தவரை, புது வருடத்தில் விற்பனை, முந்தைய ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு தவணை முறையில் 30 சதவிதம் பேர் பொருட்கள் வாங்கினர். இந்த ஆண்டு தவணை முறையில் பொருட்களை வாங்குவது 35 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. இது, மக்கள் கையில் ரொக்கத் தொகை அதிக அளவில் இல்லை என்பதைக் காட்டுகிறது'' என்றார்.

புத்தாண்டில் முந்தைய ஆண்டைவிட நடப்பு ஆண்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை சுமார் 20 சதவிகிதம் குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தள்ளாடிய புத்தாண்டு விற்பனை!

நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பன், ''கடந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலையால், சம்பள உயர்வு குறைந்து போனது, போனஸ் கிடைக்​காமல் போனது அல்லது குறைவாகக் கிடைத்தது. மேலும், பால் தொடங்கி பஸ் கட்டணம் வரை பெரும்பாலான பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடிய வில்லை என்பதால், புத்தாண்டில் புதுப் பொருட்களை வாங்குவது குறைந்துள்ளது'' என்றார்.

இதெல்லாம் இருக்கட்டும்... டாஸ்மாக் விற்பனை எவ்வளவு தெரியுமா? புத்தாண்டுக்கு முந்தைய நாள் விற்பனை, கடந்த ஆண்டைவிட 20 கோடி ரூபாய் உயர்ந்து 95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இதை எந்தப் பொருளாதாரக் கணக்கில் சேர்ப்பது?

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism