Published:Updated:

ரத்தக் காத்தாடி... மரண நிமிடங்கள்!

தெரிஞ்சு சுதாரிக்கிறதுக்குள்ள கழுத்தை அறுத்துடுச்சு!

ரத்தக் காத்தாடி... மரண நிமிடங்கள்!

தெரிஞ்சு சுதாரிக்கிறதுக்குள்ள கழுத்தை அறுத்துடுச்சு!

Published:Updated:
##~##

மாஞ்சா நூல் மீண்டும் ஓர் உயிரைப் பலி​வாங்கி இருக்கிறது. எத்தனை முறை எச் சரிக்கை செய்தாலும் ஒரு நூல் பல உயிர் களைப் பலிவாங்குவது தொடரவே செய்கிறது. இதோ கடந்த வாரத்தில் ஜெயகாந்தன்! 

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் ஜெய காந்தன். புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மனைவி மாலா மற்றும் ஒரு வயதுக் குழந்தை சஞ்சனா சகிதம் மாமியார் வீட்டுக்குச் சென்றவர், திரும்பும் வழியில் மாஞ்சா நூலுக்குப் பலியாகி விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோகம் விலகாமல் பேசினார் ஜெயகாந்தனின் தந்தை குமார். ''வருஷப் பிறப்பு என்பதால் காலையிலேயே மனைவி மற்றும் குழந்தையைக் கூட்டிட்டு கோயிலுக்குப் போயிட்டு வந்தான். சாயந்திரம் குடும்பத்தோட மாமியார் வீடு இருக்கிற புளியந்தோப்புக்கு சென்ட்ரல் வழியா போய் இருக் காங்க. அங்கேதான் என் பையன் ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டான்'' என்ற அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

ரத்தக் காத்தாடி... மரண நிமிடங்கள்!

அவரைச் சமாதானம் செய்துவிட்டு நடந்ததை விவ ரித்தார் ஜெயகாந்தனின் நண்பர் செந்தில். ''சென்ட்ரல் பாடிகார்டு முனீஸ்வரன் கோயிலைத் தாண்டி பாலத்து மேலே ஏறி கொஞ்ச தூரம் போயிருக்காங்க. லீவு நாள் என்பதால், கூட்டமே இல்லை. அப்ப கழுத்துல ஏதோ உரசின மாதிரி இருந்திருக்கு. அவரு மாஞ்சா நூலுனு தெரிஞ்சு சுதாரிக்கிறதுக்குள்ள தொண்டைக் குழியை மாஞ்சா கயிறு கிழிச்சுருச்சு. வண்டியை அப்படியே போட்டுட்டுக் கீழே இறங்கி இருக்கார். கழுத்துல திடீர்னு

ரத்தக் காத்தாடி... மரண நிமிடங்கள்!

ரத்தத்தைப் பார்த்த அவரோட மனைவி மாலாவுக்கு நடந்தது என்னன்னே புரியல.  ரத்தம் கொட்டுறதைப் பார்த்து அவங்க பயந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்பக்கூட மனைவியோட துப்பட்டாவை வாங்கி ரத்தத்தைத் துடைச்சுக்கிட்டே, 'பயப்படாதே... ஒண்ணும் ஆகாது’னு சொல்லி ஜெயகாந்தன் மனைவியை சமாதானப்படுத்தி இருக்கார். இதைப் பார்த்த ஆட்டோக்காரர் ஒருத்தர்தான், உடனே வண்டியில் ஏத்திக்கிட்டு பக்கத்தில் இருந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனார். அதுக்குள்ள ரத்தம் ரொம்பவும் வெளியேறிடுச்சு. ஆஸ்பத்திரியில் இறங்கிய பிறகும், அழுத மனைவியை அவர்தான் சமாதானப்படுத்தினாராம். ஆனால், டாக்டர் வந்து அவரைக் கவனிக்கிறதுக்குள்ள மனைவி முன்னாடியே உயிர் பிரிஞ்சிருச்சுங்க. கைக் குழந்தையோட கதறி அழுவுற அந்தப் பொண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்றது? தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்ட்ரல் வழியாத்தான் போறாங்க. போலீஸ் ஸ்டேஷனும் பக்கத்தில்தான் இருக்கு. மாஞ்சா காத் தாடி விடுறதைக்கூட அவங்களால் கண்காணித்து தடுக்க முடியலைன்னா என்னங்க அர்த்தம்?'' என்றார் வேதனையோடு.

''எங்க ஸ்டேஷனில்  இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் போன வாரம் பாடிகார்டு முனீஸ்வரர் கோயில் வழியா வண்டியில் போனார். அவர் கழுத்திலும் இதேபோல் மாஞ்சா கயிறு மாட்டியது. ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு, உடனே கயிற்றைப் பிடிச்சுட்டார். அதில் அவருடைய கை விரலை மட்டும் கயிறு பதம்பார்த்தது. இப்போது ஆறு தையல் போடப்பட்டுள்ளது'' என்றார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர்.  அப் போதாவது போலீஸார் சுதாரித்து இருக்கலாம்.

ரத்தக் காத்தாடி... மரண நிமிடங்கள்!

திருவல்லிக்கேணி இன்ஸ் பெக்டர் சங்கரிடம் பேசினோம். ''சென்னையில் சமீபத்தில் மாஞ்சா நூல் பட்டம் குறைந்து இருந்தது. நாங்களும் தீவிரக் கண் காணிப்பில்தான் இருந்தோம். சம்பவம் நடந்த அன்று மாஞ்சா நூலில் பட்டம்விட்ட பையன் பெயர் ரமேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது சிறுவனான அவன், புது வருடத்தைக் கொண்டாடு​வதற்​காக மாஞ்சா நூலையும் பட்டத்தையும் வாங்கி இருக்கிறான். பாடிகார்ட் முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள கல்லறையில் இருந்துதான் பட்டத்தை விட்டிருக்கிறான். அதுதான் ஜெயகாந்தனின் உயிரைப் பறித்துவிட்டது. இப்போது அந்தப் பையனைக் கைதுசெய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டோம். எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதும், நூல் விற்பனையும் கிடையாது. பட்டம் விடுபவர்கள் பெரும்பாலும் சின்னப் பையன்கள்தான். அவர்களுக்கு விபரீதம் புரி வது இல்லை. பெற்றோர்தான் அவர்களுக்கு இதன் அபாயத்தை எடுத்துச்சொல்ல வேண்டும்'' என்றார்.

விளையாட்டு விபரீதமாவது, இதுவே கடைசியாக இருக்கட்டும்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism