Published:Updated:

அழகிரி அண்ணன் உண்மையை உணரவேண்டும்!

முகாம் மாறிய

அழகிரி அண்ணன் உண்மையை உணரவேண்டும்!

முகாம் மாறிய

Published:Updated:
##~##

ழகிரியின் தளபதி, இப்போது ஸ்டாலின் அருகில்! 

'அட்டாக்’ என்றாலே மது ரையில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வந்த காலம் உண்டு. அந்தப் பாண்டி  அழகிரியின் கேங்கில் இருந்து தன் னு​டைய ஜாகையை ஸ்டாலின் பக்கமாகத் திருப்பி உள்ளார். இது, மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. மதுரை மாநகர் மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளரான அட் டாக் பாண்டி, கடந்த 31-ம் தேதி மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை வந்து மு.க. ஸ்டா லினைச் சந்தித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாண்டியிடம் பேசினோம்.

''அழகிரியின் தீவிர விசுவாசியான நீங்கள் திடீரென்று ஸ்டாலின் பக்கம் வரக் காரணம் என்ன?''

''தளபதி அணி, அண்ணன் அணி என்று எல்லாம் கட்சியில் ஒன்றும் இல்லை. நான் தள பதி ஸ்டாலினைச் சந்திப்பது நேற்று இன்று நடப்பது அல்ல. 15 ஆண்டுகளாக அடிக்கடி தளபதியைச் சந்தித்து​தான் வருகிறேன். பல ஆண்டு​களுக்கு முன், சேலம் மாநாடு நடந்த போதும் அவரைச் சந்தித்​தேன். அதன் பிறகு, திருநெல்வேலி மாநாட்டின்போதும் 45 கிலோ எடையுள்ள உயிருள்ள மலைப் பாம்பை தோளில் மாட்டிக்​கொண்டு சென்று அவரைச் சந் தித்தேன்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், அழகிரி அண்ணனிடம் என்னை அறிமுகப்படுத்தியது அப்போது

அழகிரி அண்ணன் உண்மையை உணரவேண்டும்!

முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்த என் சித்தப்பா வேலுச்சாமிதான். 'பாண்டிதானே... எனக்கு நல்லாத் தெரியுமே. தலைவர் வர்றப்ப எல் லாம் காருக்கு முன்னாடி பைக் அணிவகுப்பு போறது தம்பிதானே...’ என்று அப்போது சொன்னார் அழகிரி. அப்போது தொடங்கியது அண்ணனுக்கும் எனக்குமான பாசம். துரை தயாநிதியை நான் தோளில் தூக்கிக்கொண்டு திரிவேன். துரை மூணாப்பு படிக்கும்போது எல்லீஸ் நகரில் இருக்கும் டியூஷனுக்கு நான்தான் புல்லட்டில் வைத்து அழைத்துச் செல்வேன். துரை வளர்ந்த பிறகும் அவருக்கும் அண்ணனின் வீட் டுக்கும் நாயைப்போல காவல் காத் தேன். அப்புறம் அரசியலில் சில சம்பவங்கள் நடந்தன. அதில் நான் பலிகடா ஆக்கப்பட்டேன்.

சி.பி.ஐ. நான்கு நாட்கள் என்னை கஸ்டடியில் எடுத்தது. அப்போது என்ன நடந்தது என்பது எல்லாம் அழகிரி அண்ணன் உட்பட யாருக்காவது தெரியுமா? அழகிரி அண்ணனுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிடு என்று நான்கு நாட்கள் என்னை 'வித் அவுட்’டாக உட்கார வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். மூன்று நாட்கள் தூங்கவிடவில்லை. அப்போது ஒரு அதிகாரி என்னை முகத்தில் எட்டி உதைத்ததில் என் முன் பல் உடைந்தது. ஆனால், நான் 'அன்று ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்​டனர். நானும் கலந்து​கொண்டேன்’ என்று மட்டும்தான் சொன்​னேன்.பிறகு, நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்தது. என் குடும்பத்தில் பலரும் என்னை செயற்கைப் பல் கட்டிக்கொள்ளச் சொன்னார்கள். நான் நினைத்து இருந்தால், தங்கப் பல் கூட கட்டி இருக்கலாம். ஆனால், அழகிரி அண்ணன் நினைவாக அந்த கேப் அப்படியே இருக்கட்டும் என்று பிளாஸ்டிக் பல்லை சும்மா பொருத்தி வைத்துள்ளேன்... இதோ பாருங்கள் அந்தப் பல்!'' (படக்கென்று பல்லைக் கழட்டி நம் முன் நீட்டுகிறார்).

''இவ்வளவு விசுவாசியாக இருக்கும்போது ஸ்டாலினை வந்து பார்த்தது ஏன்? அழகிரி வருத்தப்பட மாட்டாரா?''

''வருத்தப்பட மாட்டார். நான் நடு நிலையான ஆள் என்று அவருக்குத் தெரியும். மதுரையில் பலரும் அழகிரி அண்ணன் படத்தை மட்டும் வைத்து காலண்டர் போடுவார்கள். ஆனால், நான் தளபதி படமும் அண்ணன் படமும் வைத்து காலண்டர் போடுவேன். இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அழகிரி அண்ணன் அவருக்கே தெரியாமல் நடக்கும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சிலரை நம்பி அவர் ஏமாந்து கொண்டு இருக்கிறார். அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்.''

அழகிரி அண்ணன் உண்மையை உணரவேண்டும்!

''யார் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?''

''வேறு யார்? பொட்டு சுரேஷ்தான். ஏற்கெனவே பொட்டு சுரேஷ் மதுரையில் தி.மு.க-வை எப்படி எல்லாம் சிதைத்தார் என்று கட்சிக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் பகிரங்கமாகப் பேசி இருக்​கிறார்கள். சாதாரணமாக இருந்த அவர் இன்றைக்கு அமோகமாக வளர்ச்சி அடையக் காரணம் என்ன? அண்ணனுடன் இருந்த பலரையும் ஒழித்தது யார்? அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் மதுரையில் அவர் செய்த காரியங்கள் எதுவும் அழகிரி அண்ணனுக்குத் தெரியக் கூடாது என்று அவரைச் சுற்றி ஒரு கருங்கல் கோட்டையை எழுப்பி விட்டனர். ஒரு வழியாக, அவரது துரோகத்தை அறிந்து கொண்டு அண்ணன் அவரை ஒதுக்கிவைத்து விட்டார் என்று நினைத்தோம். ஆனால், மீண்டும் அவர்களின் உறவு தொடர்கிறது.

அழகிரி அண்ணன் உண்மையை உணரவேண்டும்!

மதுரையில் சுரேஷின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பம் ஆகிவிட்டது. மதுரையில் இருக்கும் உண்மையான கட்சித் தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இன்றைக்கும் பொட்டு சுரேஷ§க்கு உயர் மட்டத்தில் போலீஸ் அதிகாரி​கள் பலர் இருக்கிறார்கள். உளவுத் துறை அதிகாரி​களிடம் அண்ணனைப் பற்றிய பொய் தகவல்களைச் சொல்லி ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்.''

''இன்னும் நீங்கள் போலீஸ் கண்காணிப்பில் இருப் பதாகக் கூறப்படுகிறதே?’

'இது எல்லாமே திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி. அழகிரியிடம், 'அட்டாக் பாண்டியை போலீஸ் சுட்டுக்கொல்லப் போகிறார்கள். அதை நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். அப்படிக் கொலை செய்யப்பட்டால், அதைவைத்து அரசியல் செய்து அவரது சாதி ஓட்டுக்களை வாங்கி விட லாம்’ என்று சிலர் அவரிடம் சொன்னதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்​கொள் கிறேன். ஸ்டாலினையும் அழகிரியையும் பிரித்து, கட்சியை அழிக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் மேற்கொள்கிறார்கள். அந்தச் சூழ்ச்சிக்கு அண்ணன் அழகிரி பலி ஆகிவிடக் கூடாது. என்னைப் பொறுத்தவரை தலைமைக்கு ஸ்டாலின்... கட்சியை வழிநடத்தும் அமைப்புச் செயலாளராக அழகிரி. ரயில் தண்டவாளம்போல இருவரும் இணைந்து சென்றால்தான், பயணிகளான கட்சித் தொண்டர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும். கட்சிக்குக் கெடுதல் நடக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதுதான் ஒரு உண்மையான தொண்டனுக்கு அழகு. அதை தான் இப்போது நான் செய்துள்ளேன். ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த அண்ணன் அழகிரியின் பிறந்தநாளுக்கு நேரில் வந்து வாழ்த்திய தளபதி, 'நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்’ என்றார். அதைத்தான் தலைவரும் விரும்புகிறார்.

இதை முக்கியமாக அழகிரி அண்ணன் உணர வேண்டும்.''

பட்டாசாக வெடிக்கிறார் அட்டாக். எங்கே போய் முடியுமோ இது?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism