Published:Updated:

''கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது!''

பற்றி எரியும் 'மட'ப் பேச்சு

''கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது!''

பற்றி எரியும் 'மட'ப் பேச்சு

Published:Updated:
##~##

''சங்கர மடமா இது?'' என்பது கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வாயில் அடிக்கடி உதிரும் வார்த்தைகள். இப்போ​தும் இது சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது. தி.மு.க-வில் அந்த வார்த்தை ஏற்படுத்திய கொந்தளிப்பைவிட, சங்கர மடத்து பக்தர்கள் தரப்பிலும் அது பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது! 

காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயரா​மனுடைய கொதிநிலை சற்று அதிகம். ''சங்கர மடம் என்பது பாரம்பரியமிக்கது. காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர், ஹொய்சால வம்சத்தைச் சேர்ந்த கன்னடப் பிராமணர். ஜெயேந்திரர், திருவாரூரைச் சேர்ந்த தமிழர். பாலப் பெரியவரான விஜயேந்திரர், தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர். மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் எந்த உறவும் கிடையாது. சங்கர மடத்தில் பட்டத்துக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மடங்களிலும் இருந்து பெரிய சதஸ் நடத்தி, அதில் முதல் மாணவராகத் தேறியவர்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது!''

ஜெயேந்திரர். அதற்குப் பிறகுதான் அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல, இந்தியாவில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட பரீட்சையில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தவர்தான் பாலப் பெரியவர் விஜயேந்திரர். வேதம், வேதாந்தம், இதிகாசம், புராணம், தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும். இதை எல்லாம் தாண்டி சன்னி​யாசி யோகம் இருக்கிறதா என்று, ஜாதகமும் பார்ப்பார்கள். அதற்குப் பிறகுதான் மடத்தில் பட்டம் சூட்டப்படும். தி.மு.க-வைப்போல கோட்டா சிஸ்டத்​தில் எல்லாம் பதவி வழங்கும் வழக்கம் சங்கர மடம் மட்டும் அல்ல; எந்த மடத்திலுமே கிடையாது.

''கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது!''

ஆனால், இந்த விஷயம் எதுவுமே தெரியாத கருணாநிதி, எதற்​கெடுத்தாலும் 'தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்று கிண்டல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தலைவர் பதவிக்கு ஸ்டாலினும் அழகிரியும் சண்டை போட்டுக்கொள்வது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்னை. அதில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், இந்துக்களைப் புண்படுத்தும்படி பேசுவதை கருணாநிதி நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன்​தானே சீனியர். அவரை ஏன் துணை முதலமைச்சர் ஆக்கவில்லை. அவர் ஏன் அடுத்த தலைவர் ஆகக் கூடாது? இப்படி எல்லாம் நாங்கள் பேச ஆரம்பித்தால், தி.மு.க-வின் நிலை என்ன ஆகும்? இதேபோல்தான் முன்பு, 'இந்து என்றால் திருடன்’ என்று பேசி வாங்கிக் கட்டிக்கொண்டார் கருணாநிதி.

தன் கணவர் ஸ்டாலின் திருநெல்வேலியில் இளைஞர் அணிக் கூட்டத்தை நடத்திக்கொண்டு இருந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைத் தரிசிக்க வந்துவிட்டார் அவரது மனைவி துர்கா. கருணாநிதி குடும்பத்துப் பெண்கள் எல்லாரும் நெற்றியில் ஒரு ரூபாய் அளவுக்கு குங்குமப் பொட்டு

''கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது!''

வைத்துக் கொள்வார்கள். ஆனால், நெற்றியில் குங்குமம் வைத்து இருந்த ஒருவருக்கு வியர்வை வழிந்தபோது 'என்னய்யா நெத்தியில ரத்தம் வழியுது?’ என்று கிண்டல் அடித்தார். கருணாநிதிக்கு உண்மையிலேயே தைரியம், தெம்பு, திராணி இருந்தால், நாலரைக் கோடித் தமிழர்களின் தலைவர் என்று அவரே அவருக்கு ரப்பர் ஸ்டாம்ப் குத்திக்கொள்கிறாரே... அது உண்மையாக இருந்​தால், அவரது வீட்டுப் பெண்​களைக் கண்டிக்க வேண்டியதுதானே... அது மட்டும் கருணாநிதியால் முடியாது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. ஆனால், இதுவரை நமது மத்திய அமைச்சர் அழகிரி ஒரே ஒரு முறை​யாவது பார்லிமென்ட் கூட்டத்தில் பேசி இருப்பாரா? இவருக்கு சைரன் வைத்த கார், பாதுகாப்புக்கு போலீஸ், டெல்லிக்கும் சென்​னைக்கும் மதுரைக்கும் பறக்க விமானக் கட்டணம், மந்திரி பதவி போன பிறகும்கூட பென்ஷன் என்று பல லட்சங்களை வாரி வழங்கப்​போகிறோம். ஏன்... மந்திரிப் பதவிக்குத் தகுதி​யான ஆள் தி.மு.க-வில் வேறு யாருமே இல்லையா? எதற்கு அழகிரிக்கு இந்தப் பதவியை வழங்கினார் கருணாநிதி. தனது மகன் என்ற ஒரே தகுதி இருந்ததால்தானே? ஆனால், இதுபோல எந்த உறவுமுறையும் மடங்களில் செல்லுபடி ஆகாது.

கருணாநிதிக்கு பொழுது போகவில்லை என்றால், இந்துக்களை வம்புக்கு இழுப்​பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால், நாங்கள் யார் என்பதை வரும் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம். கருணா​நிதிக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், கிறிஸ் தவர்களைப்பற்றியும், முஸ்லிம்​களைப்பற்றியும் பேசிப் பார்க்கட்டுமே. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார். இந்துக்களைப்பற்றி இழிவாகப் பேசுவதை அவர் இனி​யும் நிறுத்திக் கொள்ளாவிட்டால், தேர்தல் நேரத்தில் எல்லா இந்துக்களுக்கும் கருணாநிதியின் இழிவான பேச்சுக்களை ஞாபகப்படுத்துவோம்'' என்று கொதித்தார் வளசை ஜெயராமன்.

வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதானா?

- எஸ்.கோபாலகிருஷ்ணன்