Published:Updated:

உ.பி.யில் தொடரும் துயரம்: மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

விகடன் விமர்சனக்குழு
உ.பி.யில் தொடரும் துயரம்: மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!
உ.பி.யில் தொடரும் துயரம்: மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!
உ.பி.யில் தொடரும் துயரம்: மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தொகுதியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதி அசாம்கார். இங்குள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமி , 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த், முகேஷ், துர்கேஷ் மற்றும் விக்ரம் என்றும், அதில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக, மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.