Published:Updated:

தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஹைதர் அலி கைது!

Vikatan Correspondent
தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஹைதர் அலி கைது!
தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஹைதர் அலி கைது!
தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஹைதர் அலி கைது!

கோவை: கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஹைதர் அலி, பாலக்காட்டில் நேற்று (3ஆம் தேதி) கைது செய்யப்பட்டார்.

கடந்த 1993ஆம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் பாட்ஷா என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக கோவையில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை கடந்த 1999ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு கோவையைச் சேர்ந்த தீவிரவாதி ஹைதர் அலி முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவை பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஹைதர் அலியை தேடி வந்தனர். அவர், சௌதி அரேபியா, ரியாத் பகுதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என காவல்துறையினரால் கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், கேரள மாநிலம், பாலகாட்டில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரை நேற்று (3ஆம் தேதி) காலை எஸ்.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, ஹைதர் அலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர், ஹைதர் அலியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சென்னை ரயில் நிலைய வெடிகுண்டு சம்பந்தமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

-ச.ஜெ.ரவி