Published:Updated:

பீகாரில் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

Vikatan Correspondent
பீகாரில் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!
பீகாரில் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!
பீகாரில் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

பாட்னா: பீகாரில் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். இவர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகக் கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், முகமது சிஜாம் டிப்&டாப்பாக ஆடை அணிந்து இளம்பெண்களை வசீகரித்ததாகவும், ரயில்வேயில் பணிபுரிவதால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதன் மூலம் உல்லாசமாக வாழலாம் என கிராமப் பகுதிகளிலுள்ள இளம்பெண்களிடம் ஆசை வார்த்தையையைக் கூறியும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

பின்னர், அதிக வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளும் திருமணம் முடித்து, அவர்களுடன் சில நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கிறார். பின்னர் தனக்கு வேறு ஊருக்கு வேலை மாறுதலாகி விட்டது எனக்கூறி, நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்று விடுவார்.

இதேபோன்று, பீகாரில் உள்ள மேற்கு சாம்பரான், சிதாமர்கி, முசாபர் பூர், பகல்பூர், பகுசாரை, பூர்ணியா, மாதேபுரா, கிடின் கஞ்சியிலும், மேற்கு வங்கத்திலுள்ள மிட்னாபூர், அசன்கால், மால்டா, சீல்டா மற்றும் அவுரா பகுதிகளில் உள்ள 72 பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.