பிரீமியம் ஸ்டோரி
மோட்டிவ் 6

வாசகர்களே... கனவுக் கன்னி ஷப்னம் சக்ஸே​​னாவின் அந்தரங்க டைரியை நீங்கள் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்...

பாத்ரூம் கூரையில் ரகசிய கேமரா!

மார்ச் 8

என் வாழ்வின் மிக மோசமான நாட்கள் துவங்கிவிட்டன என்பதற்கான மணி இன்று அடித்துவிட்டது. சிங்கப்பூர் வழியாக, மும்பைக்கு நான் வந்து இறங்கியபோது, ஏர்போர்ட்டில் எனக்காக கார் காத்திருந்தது. ஆனால், போலா வரவில்லை. ''போலா உங்களை இன்​னிக்கு இந்த டயத்துக்கு வந்து பிக்-அப் பண்ணிக்கச் சொன்னாரு மேடம்!'' என்றான் டிரைவர்.

மோட்டிவ் 6

அபார்ட்மென்ட்டுக்கு நான் வைத்திருக்கும் மாற்றுச் சாவி போட்டு உள்ளே நுழைந்ததுமே கலங்கிப் போய் நின்றுவிட்டேன். புயல் கடந்த பூமி மாதிரி தாறுமாறாகச் சிதறிக் கிடந்தது என் வீடு. சோபாவெல்லாம் தலைகீழாகப் புரண்டு கிடந்தது. தரையெல்லாம் சிக்கன் பீஸ்​களும், காய்ந்து போன நூடுல்ஸும் சிதறிக் கிடந்தன. படுக்கை அறைக்கு ஓடிப்போனேன். என் பீரோக்கள் அத்தனையும் திறந்து கிடக்க, காஸ்ட்லியான உடைகள் ஒன்றுகூட இல்லை. காஸ்ட்லியான வாட்ச், பல நாடுகளிலிருந்து நான் தருவித்த பர்ஃப்யூம்கள், நகைகள், விதம் விதமான ஷூக்கள் எல்லாமே

மோட்டிவ் 6

காணாமல் போயிருந்தன. வங்கிக் கணக்கில் இருக்கும் டெபாசிட்கள் போக நிறையத் தொகை நான் ரொக்கமாகவே வீட்டில் வைத்திருப்பது வழக்கம். அந்தப் பணத்தைப் பூட்டி வைக்கும் சேஃப்டி லாக்கரும் உடைக்கப்​பட்டிருந்தன. அதில் இருந்த சில லட்சம் ரூபாய்களும், டாலர்​களும், யூரோக்களும் சுத்தமாக வழிக்கப்பட்டு இருந்தன!

போலா எங்கே போனான்? ராம் துலாரி என்ன ஆனாள்? குரல் கொடுத்துப் பார்த்தேன்... பதில் வரவில்லை. பயம் கூடிப்போனது. பாத்ரூமைத் திறந்து பார்ப்பதற்காக நகர்ந்தேன். சட்டென்று முதுகுத் தண்டில் ஐஸ் கட்டியாக திகில் பரவியது. என்னு​டைய பாத்டப்புக்குள் போலாவையும், ராம் துலாரியையும் ரத்தக் களறியாகக் கொன்று தண்ணீரில் கொள்ளையர்கள் மிதக்க விட்டிருப்பதான காட்சி கற்பனையில் விரியும்​போதே மயக்கம் தள்ளியது.

சமாளித்துக்கொண்டு, போன் அருகில் ஓடினேன். போலீஸுக்கு ரிங் செய்வதற்காக ரிசீவரைக் கையில் எடுத்தேன். போன் மீது ஒரு சீட்டு ஒட்டியிருப்பதை அப்​போது​தான் பார்த்தேன்.

'போலீஸுக்கா? அதற்கு முன் டி.வி-க்கு அருகில் பாரு!' என்றது சீட்டு.

கொள்ளையர்கள் ஏனோ டி.வி., ஹோம் தியேட்டரை​எல்லாம் களவாடா​மல் விட்டிருந்தார்கள். டி.வி-க்கு அருகில் ஒரு டி.வி.டி மட்​டும் கிடந்தது. நடுங்கும் கைக​ளால் அதை எடுத்து டி.வி.டி. பிளேயருக்குள் போட்​டேன். பாத் டப்​புக்குள் போலாவும், ராம் துலாரியும் கிடக்கிற கொடூரக் காட்சியைப் பார்க்க மனதைத் திடப்​படுத்திக் கொண்​டேன்.

டி.வி.டி-யில் பாத்ரூம் காட்சி விரிந்தது. ஆனால், அந்த இருவர் அதில் இல்லை. இருந்தது நான்!

மெல்லிய ராகத்​தோடு பாடிக்கொண்டே உடை​களை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன். ஷவரைத் திறக்கிறேன். பாத் டப்புக்குள் இறங்குகிறேன். அதில் நின்றபடி உள்ளாடைகளையும் கழற்றி​விட்டு பிறந்த மேனியாகிறேன். என் அழகிய வளைவுகளை நானே அப்படியும் இப்படி​யுமாக குனிந்து பார்த்துக் கொள்​கிறேன். எதிரில் இருக்கும் கண்ணாடியில் எனக்கு நானே பெருமிதமாக குசலம் விசாரித்துக் கொள்கிறேன். பாத் டப்பில் படுத்து ஒவ்வொரு அங்கமாக, மிக நிதானமாக வருடிக் கொண்டு குளிக்கத் துவங்குகிறேன். மறுபடி எழுந்து என் மேனியின் சிவப்பை மேலும் சிவப்பாக்கும் விதமாக டவலால் அழுந்தத் துடைத்துக் கொள்வதையும் கேமரா தெளிவாகப் படம் பிடித்திருந்தது.

நான் பேயறைந்தாற்போல் டி.வி.டி-யைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கொள்ளைக்​காரர்கள் என்ன சொல்கிறார்கள்? கொள்ளை விவகாரத்தை நான் போலீஸுக்குக் கொண்டு போனால், இந்த நிர்வாணக் காட்சிகள் வெளியில் வரும் என்கிறார்​களா?

தீப்பற்றிய மாதிரி ஒரு விஷயம் எனக்கு உறைத்தது... இதை யார் எப்போது எடுத்திருக்க முடியும்? என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள் வரக்கூடியவர்கள் யார்? வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்யவும், நவீன மோஸ்தரில் மாற்றங்கள் செய்யவும் நான் அதிகாரம் கொடுத்திருந்த ஒரே ஆள் போலாதானே? சரி, போலா எங்கே? ஏன் ஏர்போர்ட்டுக்கு வரவில்லை?

டெலிபோனுக்குப் பக்கத்தில் வைத்திருந்த துண்டுச் சீட்டை மறுபடி எடுத்துப் பார்த்தேன். இப்போது புரிந்தது. அதில் இருக்கும் எல்லா எழுத்துமே சாய்ந்த வாட்டில் சிரித்தன. அது போலாவின் கையெழுத்துதான்! கஷ்டப்பட்டு வேறு மாதிரி எழுதுவதற்கு முயற்சி செய்திருந்தான்.

எனக்கு தேகம் நடுங்கியது. பாத்ரூம் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தேன். பாத்டப் காலியாக இருந்தது. விளக்கு​களை ஒவ்வொன்றாக ஆன் செய்தேன். கூரையை நிமிர்ந்து பார்த்தேன். நான் பார்த்த காட்சிகளின் கோணத்தை வைத்து, கூரையின் ஒரு ஓரத்தைக் குறி வைத்துச் சோதித்தேன். அங்கே பொருத்தியிருந்த ஒரு விளக்கின் கீழே சின்னதாக கண்ணாடிப் புள்ளி தெரிந்தது. மெதுவாக விரல்களால் நெருடிப் பார்த்தேன். ரகசிய கேமராவேதான். படுபுரொஃபஷனலாக, நன்றாகத் திட்டமி​ட்டு டிஸைன் செய்யப்பட்டு அங்கே பொருத்தி​இருந்தது அந்தக் கேமராவை.

தள்ளாட்டமாக வெளியில் வந்து படுக்கையறைக்குள் சுற்றிப் பார்த்​தேன். அங்கே ஏராளமான சர​விளக்குகள் உள்பட பல​விதமான விளக்குகளைப் பொருத்தியிருந்தான் போலா! இதில் எங்கே, எந்த ரூபத்தில் கேம​ராவை வைத்தானோ? நான் உடை மாற்றுவது, ஆடை விலகித் தூங்குவது என்று எத்தனை காட்சிகளைப் படம் பிடித்தானோ?

துரோகி! தூரத்து உறவு என்று சொல்லிக்​கொண்டு, சினிமா வாய்ப்பு தேடி மும்பைக்கு வந்து, அழுத விழி​களோடு இடம் கொடுத்​ததற்கு, அவன் தந்திருக்கும் பரிசா இது? எத்தனை பெரிய முட்டாள் நான்? ஆனால், கொட்டிவிட்ட பாலுக்காக இனி அழுதென்ன ஆகப் போகிறது? தன்னிரக்கம் என்னை நொறுக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு புத்தகத்தில் படித்​தது நினைவுக்கு வந்தது. 'துன்பமான நேரங்களில் தன்னிரக்​கத்துக்கு துளியும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது உங்களை மேலும் பலவீனமாக்கும். துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான தெளிவான வழியை யோசிக்க முடியாமல் செய்துவிடும்' என்ற அந்த தத்துவம் என்னை சட்டென்று திடப்​படுத்​தியது.

போலா இருக்கும் இடத்தை நான் தேட ஆரம்பித்தால், இந்த டி.வி.டி-யை ஏதாவது ஒரு வெப்சைட்டில் போட்டுவிடுவான் என்பது புரிந்தது. நடிகையின் வாழ்க்கை ஃபார்முலா ரொம்ப சிக்கலானது. மார்பின் நுனி வரைக்கும் வளைவுகளைக் காட்டி நடித்தாக வேண்டும். தொடையின் உச்சம் வரை, ஒரு துளியூண்டு மட்டும் மறைத்துக்கொண்டு நடிப்பது ரசிக்கப்படும். ஆனால், அவளை முழு நிர்வாணமாக இந்த உலகம் பார்த்துவிட்டால், அதன் பிறகு அவளுக்கான 'சினிமா கற்பு' காலியாகிவிடும். புகையிலை விரிந்தால் போச்சு என்பார்களே... அது முழு நிர்வாணமாகப் பார்க்கப்​பட்டுவிட்டால், ஒரு நடிகையின் மார்க்கெட் வீழ்ச்சிக்கும் பொருந்தும்!

போலாவை தேடும் எண்ணத்தை ஒத்தி வைத்தேன்!

நகைகள், பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு போலா எக்கேடும் கெட்டுப் போகட்டும். என் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தோடு ஒப்பிடும்போது, களவு போனது ஒரு பெரிய தொகையே அல்ல. ஆனால், அந்த அப்பாவிப் பெண் ராம்துலாரி என்ன ஆனாள்? அவளை என்ன செய்திருப்பான் அந்தப் பாவி?

என்னை நம்பி வந்த பரிதாபப் பெண்ணே... உன் ஆன்மா சாந்தி அடையட்டும். போலா, நீ செத்தபிறகு நரகத்தின் எண்ணெய் கொப்பரைக்குள் நிரந்தரமாக வெந்து கிடக்கக் கடவது!

மார்ச் 12

ராம் துலாரி கடத்தப்பட்டு நான்கு நாள் ஆகிவிட்டது. எந்தத் தகவலும் இல்லை. என்ன பண்ணியிருப்பான் போலா அவளை? கற்பை சூறையாடிவிட்டு, அவள் உடம்​பைத் துண்டு துண்டாக நறுக்கி, பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, கடலில் இருக்கும் மீன்​களுக்கு இரையாகக் கொடுத்​திருப்பானா? எனக்குத் தெரிந்த அத்தனை கொலைப் படங்களும் காட்சியில் ஓடின.

போலீஸுக்குப் போகாமல் இருப்பதில் என் மன​சாட்சி குடைந்தது. ஒரு க்ரைம் நடந்து, போலீஸுக்குப் போ​வதற்கு நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகும்​போது, குற்றவாளியைக் கண்டு​பிடிப்பதற்கான தடயங்களும் வாய்ப்புகளும் அழிந்துகொண்டே போகும் என்று போலீஸ் சொல்வது என் நினைவுக்கு வந்தது. என்ன செய்ய? போலா எடுத்து வைத்​திருக்கும் பாத்ரூம் டி.வி.டி-யும் பாழாய்ப் போன என் இமேஜும் தடுக்கிறதே! ராம் துலாரிக்காக இன்று இரவு வெகுநேரம் அழுதேன்.

மார்ச் 13

லூத்ரா என்ற அந்த புரொடியூசர் படுக்கையறைக் காட்சியை மட்டுமே மூலதனமாக்கி 'சாஃப்ட் போர்​னோகிராபி' எடுக்கிற 'லுச்சா' ரகம். என் செல்போன் நம்பருக்குள் இன்று எப்படியோ வந்துவிட்டான். ''ஷப்னம்ஜி! ஸ்டில் செஷன் எப்போது வைத்துக் கொள்​ளலாம்? வருகிற வியாழக்கிழமை ஓகே-தானே? அதற்குப் பிறகு பூஜையை வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்...'' என்றான்.

''என்ன ஸ்டில்? என்ன பூஜை?''

''பார்த்தீர்களா? ஒரு வாரமாக போலாகூட எனக்கு போன் பண்ணவில்லை... அவனுக்கு ஏதும் உடம்பு சரியில்​லையா? உங்கள் கால்ஷீட்களைப் பார்த்துக் கொள்ளும் ராகேஷ்ஜியிடம் நமது புதிய ஒப்பந்தம் பற்றி நீங்கள் ஏதும் சொல்லவில்லையா? சொல்லியிருந்தால், அவராவது பர்ஃபக்டாக உங்களுக்கு நினைவூட்டி இருப்​பாரே...''

எனக்கு எரிச்சல் பொங்கியது.

''லூத்ராஜி... நீங்கள் பேசுவதே எனக்குப் புரிய

வில்லை...''

''புரியவில்லையா? என் தயாரிப்பில் நீங்கள் நடிக்கும் புது படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தேனே... போலா​வோடு சேர்ந்து வந்துதானே நீங்கள் புதுப் படத்துக்குக் கையெழுத்துப் போட்டீர்கள்!''

மோட்டிவ் 6
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு