Published:Updated:

பிரேமானந்தாவைக் கொல்லத் திட்டம்?!

அதிர்ச்சிப் புகாரில் போலீஸ் அதிகாரி!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பிரேமானந்தாவை நாம் இதுவரை பேட்டிக்காக சந்தித்த நேரங்களில், 'போலீஸ் அதிகாரிகளால் என் உயிருக்கு ஆபத்து...’ என்று அழுத்திச் சொல்லிக்கொண்டே இருப்பார். அது உண்மைதானோ என்பதுபோல் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

 கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் புதுக்​கோட்டை சாமியார் பிரேமானந்தா. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயி​ருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். தனது சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கும், உள்துறை செய​லாளருக்கும்

பிரேமானந்தாவைக் கொல்லத் திட்டம்?!

மனு கொடுத்தும், நோ ரெஸ்பான்ஸ். வேறு வழியின்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான உத்தரவு பெற்றார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து சிறை திரும்பிய பிரேமானந்தாவுக்கு தொடர்ந்து பராமரிப்புக்கு வழியின்றிப் போகவே, மீண்டும் உடல்நிலை மோசமானது. கடந்த நவம்பர் மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நவம்பர் 8-ம் தேதி இருந்து  மீண்டும் சிறையில் அடைக்​கப்​பட்டார்.

ராயப்​பேட்​டை அரசு மருத்​துவ​மனையில் சிகிச்சையில் இருந்தபோதே, 'மஞ்சள் காமாலை நோய் தாக்கி உள்ளது’ என்று மருத்துவர்கள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். ஆனால், அவருக்கு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. உடனே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், வழக்கறிஞர் 'யானை’ ராஜேந்திரன்.

அவரிடம் பேசினோம். ''பிரேமானந்தாவுக்கு சிறையில் உடல்நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சேர்க்கப்​பட்ட சமயத்தில், அவர் கோமா நிலையில் இருந்தார். அங்கேயும்கூட அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. அதனால், 'தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தரவேண்டும்’ என்று அனுமதி கேட்டோம். இந்த வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதி ராஜா முன்னி​லையில் வந்தது. ஆனால், காவல் துறையினர், 'பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்...’ என்று ஒரு வாரம் ஒத்திவைக்கக் கோரினர். ஆனால், 'எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்’ என்று நான் வற்புறுத்தியதால், 15-ம் தேதியே கவுன்டர் ஃபைல் செய்யும்படி உள்துறை

பிரேமானந்தாவைக் கொல்லத் திட்டம்?!

செய​லாளருக்கு உத்தரவிட்டார். இதற்குள், 'பிரேமானந்தாவுக்கு மஞ்சள்காமாலை அளவு அதிகமாகி​விட்டது, காப்பாற்றுவது கடினம்...’ என்று மருத்துவர்கள் கூறியதாக எனக்குத் தகவல் வந்தது.

உடனே தலைமை நீதிபதி இக்பால் கவனத்துக்கு விஷயத்​தைக் கொண்டு சென்றேன். பிரேமானந்​தாவின் சகோதரி விநாயகசுந்தரி, சிகிச்சைக்கு அனுமதி கோரும் மனுவும் கொடுத்திருந்தார். அதையும் நீதிபதிக்குத் தந்தேன். விவரம்கேட்ட தலைமை நீதிபதி மனிதாபிமானத்துடன், 'பகல் 12.30 மணிக்கு இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரிப்பார்’ என்று அறிவித்தார். இந்த மனு நீதிபதி ஜோதிமணியிடம் விசாரணைக்கு வந்தபோது நிலவரம்

பிரேமானந்தாவைக் கொல்லத் திட்டம்?!

கேட்டுக்கொண்டு, 'உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், இதற்காக எந்த ஃபார்மாலிட்டியும் பார்க்கத் தேவை​யில்லை, முதலில் அவரை மருத்துவமனையில் சேருங்கள்!’ என்று உத்தரவிட்டார்.

அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல, நீதிபதி ராஜா கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு சென்றேன். அப்போது உள்துறைச் செயலாளர் கையெழுத்திட்ட ஒரு பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஸ்டேன்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரம்​கூட தெரிவிக்காமல், 'பிரேமானந்தா நல்ல உடல்நிலையில் உள்ளார். அதனால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அதாவது முந்தைய கோர்ட்டில் நடந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. பிரேமானந்தா மீது குற்றச்சாட்டுகள் வெளியானபோது, புதுக்​கோட்டை மாவட்ட காவல்துறை கண்​காணிப்பாளராக இருந்த திரிபாதி​தான், இப்போது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கிறார். எங்கே தன்னுடைய தவறுகள் வெளிப்பட்டுவிடுமோ என்று சிறையில் கவனிக்காமல் வைத்​திருக்கிறார். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்​டால்... அதற்​கான பொறுப்பு போலீஸையே சாரும்!'' என்றார்.

இதுபற்றி சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி​யிடம் கேட்டபோது, ''கோர்ட்டு உத்தரவுப்படி பிரேமானந்தா சிகிச்சை பெற்றுவருகிறார். மற்றபடி வக்கீல் கூறுவது பற்றி எனக்கு எதுவும் தெரி​யாது!'' என்றார்.

பிரேமானந்தாவுக்கு கடந்த 17-ம் தேதி மாலை வரை நினைவு திரும்பவில்லை. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிரேமானந்தாவின் சகோதரி மற்றும் சீடர்களில் பலர் கல்லீரலை தானம் அளிக்க முன்வந்துள்ளனர். ஆனால், எதுவும் அவருக்குப் பொருந்தவில்லை. ''உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது...'' என்று டாக்டர்கள் கூறிவிட்டார்களாம்.

மரணப்படுக்கையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார் பிரேமானந்தா!

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு