முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு

. நீதிமன்றம் அமைத்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தீவிரமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. 'இந்த ஸ்பெஷல் கோர்ட்டை மத்திய அரசு எப்படி அமைக்கும்? இதில் மத்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய நீதிபதிகளை நியமிக்குமா? அல்லது 'சத்யம்’ ராமலிங்க ராஜு வழக்கில் ஏற்பட்ட குழப்பங்கள் இதிலும் ஏற்படுமா?’ என்று பலதரப்பட்ட தகவல்கள் டெல்லியில் உலாவருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்யும் வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்டோம்..
பிரசாந்த் பூஷண்

''மத்திய அரசு நேரடியாக ஸ்பெஷல் கோர்ட்களை அமைக்காது. நீதிமன்றத்துக்கு தேவையான உள்ள

மைப்புகள், கட்டட அமைப்புகள் போன்ற வசதிகளை மட்டுமே அரசு செய்து கொடுக்கும். 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால், அதன் எல்லைக்குட்பட்ட உயர்நீதிமன்றம்தான் அந்த தனிகோர்ட் நீதிபதியை நியமனம் செய்யும். குறிப்பாக இந்த தனிகோர்ட் டெல்லியில் அமையுமானால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த முடிவுகளை எடுக்கும்.''

பரமசிவம்

''சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை உயர் நீதிமன்றம்தான் நியமிக்கிறது. அவர்களுக்குள்ள அதிகாரத்தை உயர் நீதிமன்றமே முடிவுசெய்யும். சில சமயம் நாடாளுமன்றத்திலும் சட்டம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை நிர்ணயம் செய்யலாம். பங்குச் சந்தை ஊழலில் சிக்கிய ஹர்ஷத்

மேத்தா மீதான வழக்கில் இப்படித்தான் சட்டம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு நீதிமன்றம் நியமனம் ஆனது. இப்படி நியமிக்கப்படும் நீதிபதிகள் சில சமயம் மாற்றப்பட்டுள்ளனர். அதனால், வழக்கை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்த 2ஜி வழக்கைப் பொறுத்தமட்டில் உச்ச நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிப்பதால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை அரசு நினைத்த மாதிரி எல்லாம் மாற்ற முடியாது. இழுத்தடிக்கவும் முடியாது!''

ராஜீவ் தவான்

''சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது நடைமுறையில் இருப்பதுதான். இந்த 2ஜி விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டியது குறித்து சுப்ரீம் கோர்ட் சிபாரிசு செய்யலாம். ஆனால், உத்தரவு போடமுடியாது. அதே சமயத்தில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்போது, அதனுடைய வரம்புகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாக வரையறுக்க வேண்டியதும் அவசியம். இது குறித்தும் உச்ச நீதிமன்றம் ஆலோசனைகள் வழங்கலாமே தவிர, அவர்களே சட்ட வரைமுறைகளைக் கொடுக்க முடியாது. அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.''

சி.எஸ்.வைத்தியநாதன்

''1952-ல் மேற்கு வங்காளத்தில் அன்வர் அலி சர்கார் என்கிற வழக்குக்கு முதன் முதலில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் ஊழல் வழக்குகளில் ஏ.ஆர்.அந்துலே வழக்கிலும், ஹர்ஷத் மேத்தா வழக்கிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர்தான், சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக யாரை நியமனம் செய்யலாம் என்ற முடிவை எடுப்பார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வழக்கிலும்கூட, சென்னை உயர்

நீதிமன்றம்தான் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிகளை நியமனம் செய்தது. மத்திய அமைச்சரவைக் குழுவில் ஊழல் வழக்குகள் எல்லாவற்றிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது பற்றி கடந்த வாரம் பேசியுள்ளனர்.

ஆனால், இவற்றைவிட ஊழல்களை ஒடுக்க பீகாரில் நிதிஷ்குமார் துணிச்சலாகச் செய்துள்ள விஷயங்கள் பாராட்டுக்குரியவை. 'பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் யாராவது அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருந்தாலோ அல்லது ஊழல்கள், பேரங்கள் செய்தாலோ அவர்களது சொத்துகளை உடனடியாக அரசு கைப்பற்றி, பறிமுதலும் செய்யலாம்!’ என்ற சட்டத்தையும் கொண்டுவந்துள்ளார். அது மாதிரி நாடு முழுக்க அமல்படுத்த வேண்டும்.''

சிறப்பு நீதிமன்றம் குறித்து சி.பி.ஐ. தரப்பில் அதன் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார்.

''ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சிறப்பு நீதிமன்றங்களைக் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு, இதை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. ஆனால், அரசுக்கு இப்போது 'சத்யம்’ ராமலிங்க ராஜு வழக்கின் மூலம் ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. அந்த வழக்கு சி.பி.ஐ-யின் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த நீதிமன்றம் பிரத்தியேகமாக 'சத்யம்’ வழக்குக்கென அமைக்கப்பட்டது என்றாலும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, சீஃப் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவர். 'குற்ற வழக்குகளுடன் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்குகளும் இதில் நடக்கின்றன. அந்த வழக்குகளை செஷன்ஸ் அந்தஸ்து உள்ள நீதிபதிதானே விசாரிக்க வேண்டும்?’ என்று ராமலிங்க ராஜு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வழக்கு விசாரணை தடைபட்டுள்ளது. இது சி.பி.ஐ. தரப்பில் சரியாக கவனிக்காமல் செய்யப்பட்ட தவறு.

இப்போது மத்திய அரசு செஷன்ஸ் நீதிபதி அந்தஸ்தில் ஒரு ஸ்பெஷல் கோர்ட்டை அமைக்க ஏற்பாடு செய்கிறது. இதே மாதிரி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் சிக்கல்கள் உள்ளன. இப்போது உள்ள சி.பி.ஐ. கோர்ட்டையேகூட 2ஜி ஸ்பெஷல் நீதிமன்றமாக மாற்றும் வாய்ப்பு உண்டு. இதுகுறித்து அரசு ஆலோசனை செய்துவருகிறது!''

எப்படியாயினும், சட்டம் தனது கடமையை நிச்சயம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்!

- நமது நிருபர்