Published:Updated:

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவக் கல்லூரி மாணவி கைது!

விகடன் விமர்சனக்குழு
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவக் கல்லூரி மாணவி கைது!
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவக் கல்லூரி மாணவி கைது!
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவக் கல்லூரி மாணவி கைது!

சென்னை: சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சுஜா (பெயர் மாற்றம்) என்ற மாணவி, விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவி சுஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக இறுதியாண்டு மாணவி அனுஷா (பெயர் மாற்றம்) மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் மாணவி அனுஷாவை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளது.