Published:Updated:

கரூரில் மாணவி பலாத்காரம் செய்து கொலை: தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரணை!

கரூரில் மாணவி பலாத்காரம் செய்து கொலை: தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரணை!
கரூரில் மாணவி பலாத்காரம் செய்து கொலை: தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரணை!

கரூர்: கரூரில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.

கரூர் அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி வினிதா, கடந்த 23ஆம் தேதி மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணைய அதிகாரிகள், பிச்சம்பட்டியில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

ஆணையத்தின் உதவி இயக்குநர் ராமசாமி, விசாரணை அதிகாரி இனியன் ஆகியோர், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வெற்றிலை தோட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது, அப்பகுதில் உள்ள மது கடை ஒன்றை அகற்றக் கோரி பல காலமாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும், தற்போது மாணவிக்கு நடந்த கொடுமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும், எனவே அந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் உதவி இயக்குநர் ராமசாமி, மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

கரூரில் மாணவி பலாத்காரம் செய்து கொலை: தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் விசாரணை!

மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த ராமசாமி, மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கைக்கு பரிந்துரைப்போம் என்றார்.