Published:Updated:

நடிகை சங்கீதா வீட்டு வேலைக்கார சிறுமி பலாத்காரம்: ஷாருக்கான் கார் டிரைவர் கைது!

மும்பை: நடிகை சங்கீதா வீட்டு வேலைக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாதூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், முன்னாள் மாடல் அழகியும், நடிகையுமான சங்கீதா பிஜ்லானியின் மும்பை வீட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமிக்கும், நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் பிந்து மிஸ்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியிடம்,  "சங்கீதாவிடம் பார்த்துவரும் வீட்டு வேலையை விட்டு வா, உனக்கு நடிகர் ஷாருக்கானின் வீட்டில் வேலை வாங்கி தருகிறேன்" என்று  பிந்து மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த சிறுமியை ஏமாற்றி நாலாசோப்ரா ரயில் நிலையத்திற்கு, பிந்து மிஸ்ரா அழைத்து வந்திருக்கிறார். அதன்பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியும் உள்ளார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் பிந்து மிஸ்ராவை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.