Published:Updated:

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

Published:Updated:
பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?
##~##

'எப்படிப் பார்த்தாலும், பொட்டு சுரேஷ் விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டு’ என்றே அரசியல் புரிந்தவர்கள் வர்ணிக்​கிறார்கள். கொலையின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் போலீஸ் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கே 'அட்டாக்’?

பொட்டு சுரேஷ் கொலை விவகாரத்தில், 'அட்டாக்'கை நோக்கியே போலீஸ் பயணிக்கிறது. முதுகுளத்தூர், கமுதிக்​காரர்கள் அதிகம் வசிக்கும் மும்பை ஏரியா ஒன்றில் 'அட்டாக்’ தங்கி இருந்ததை சிலர் உறுதிப்படுத்த, போலீஸ் அங்கே முகாமிட்டு இருக்கிறது. கள்ளத் தோணியில் இலங்கைக்குப் போய் அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பி விட்டார் என்கிறார்கள் ஒரு தரப்பினர். போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், 'அட்டாக்’கின் நண்பர்களோ ''பாண்டி எங்கும் ஓடவில்லை. பக்கத்து மாநிலத்தில் இருக்கிறார். விஜயபாண்டி சரணடைந்த பிறகு, மதுரையில் நடக்கும் விசாரணையின் போக்கை கவனித்து விட்டு நிச்சயமாக வெளியே வருவார்’' என்கிறார்கள்.

வந்தார் விஜயபாண்டி!

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கெனவே 7 பேர் சரண் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சேலத்தில் இரண்டு பேர் சரண் அடைந்ததே வழக்கின் திருப்புமுனை. ஒருவர் விஜயபாண்டி. இவர் 'அட்டாக்’ பாண்டியின் அக்கா மகன். இன்னொருவர் பிரபு என்ற ஆரோக்கிய பிரபு. வழக்கின் மையப்புள்ளியே இவர்கள்தான் என்கிறது மதுரை போலீஸ்.

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

''சமீபத்தில் சென்னை ஹோட்டலில் முக்கிய வாரிசுடன் 'அட்டாக்' என்ன பேசினார்?'' - இதுதான் விஜய​பாண்டியிடம் மதுரை போலீஸ் கேட்கப்போகும் கேள்வி! இதற்கு விஜயபாண்டி சொல்லப்போகும் பதிலில்தான் பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் அடுத்தடுத்த அதிரடி திருப் பங்கள் நடக்கும் என்று சொல்கிறது போலீஸ். இவைதவிர, 'பொட்டு சுரேஷ் கொலைக்கான ரிகர்சல் எங்கே நடந்தது? க்ளைமாக்ஸ் பேச்சுவார்த்தை சென்னை ஹோட்டலில்தான் நடந்ததா? அப்படி எனில் என்ன பேசப்பட்டது? யார் யார் ஸ்பான்ஸர்?’  - இந்த மூன்று கேள்விகளைத்தான் 'அட்டாக்' ஆட்களிடம் தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

உயிருக்கு ஆபத்து!

மூன்று மாதங்களுக்கு முன், சென்னைக்கு வந்த 'அட்டாக்’, அங்கேயே பல ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார். சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முக்கியமான சந்திப்பு நடந்ததை கட்சிப் பிரமுகர்கள் சொல்கிறார்கள். 'அட்டாக்’கும் அந்த முக்கிய வாரிசும் அந்தச் சந்திப்பில் நிறைய பேசினார்களாம். சந்திப்பு நடந்த அறைக்குள் நெருக்கமான நண்பர்கள்கூட

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

அனுமதிக்கப்படவில்லையாம். வாசலில் காவலுக்கு நின்ற விஜயபாண்டி, தனது கோஷ்டியினருடன் 'அட்டாக்'குக்கு பாதுகாப்பு கொடுத்தாராம். அந்த கோஷ்டியினரைத் தனித்தனியாகச் சந்தித்து தகவல் சேகரிக்கிறது போலீஸ். இதேநேரத்தில், மதுரையில் தனக்கு பாதுகாப்புக்காக பொட்டு சுரேஷ் தனியார் செக்யூ ரிட்டிகளை கூடுதலாக நியமிக்க ஆலோசனை நடத் தினாராம். 'அட்டாக்’கின் தாயார் பெயரில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் மனுக்களை அரசுக்கு அனுப்பியது பற்றியும், பொட்டுவும் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக புகார் மனுக்களை வேறு பெயரில் அனுப்பினாராம். கடந்த ஒரு மாதமாக இருவரும் மாறிமாறி இதுபோல 'உயிருக்கு ஆபத்து' வகையறா மனுக்களை அனுப்பி வந்தனர். அவை பற்றியும் போலீஸ் தனியாக விசாரித்து வருகிறது.

'கெட்டவனைத்தானே அழிச்சோம்!’

பொட்டு சுரேஷ் கொலையில் சரண் அடைந்த 7 பேரை தங்கள் கஸ்டடியில் எடுத்து மதுரை போலீஸ் விசாரித்தது. சபாரத்தினத்திடம் உயர் போலீஸ் அதி காரிகள் கேள்விகளைக் கேட்டார்களாம்...

''ஏண்டா? 'சத்யா’ படத்துல வர்ற மாதிரி நடந்தி ருக்கீங்களே? ரோட்டுல நீங்களும் அனாதையா செத்துக் கிடக்கத்தான் போறீங்கடா?''

''தெரியும் சார்... 'அவங்க' எங்களைப் பார்த்துக்கு​வாங்க சார்''

''எவ்வளவுடா பணம் வாங்குனீங்க?''

''பணமா முக்கியம் சார்? பழக்கத்துக்காக செஞ்சோம்''

''என்ன இருந்தாலும் ஒரு உசுரை எடுக்க உங்களுக்கு என்னடா உரிமை இருக்கு?''

''பொட்டு சுரேஷ் நல்லவனா சார்? எல்லார்கிட்டயும் கேட்டுப் பாருங்க. கெட்டவனைத்தானே அழிச்சோம்.? அந்தத் திருப்தி எங்களுக்கு இருக்கு... அதுபோதும்!''  

- இப்படி உரையாடல் நீண்டதாம்.

சந்தானம், சபா ரத்தினம்... இருவர் அணிந்திருந்த டிரஸ்ஸில் ரத்தக் கறை இருந்ததாம். கொலைக்குப் பிறகு, இருவரும் அவர்களின் டிரஸ்ஸை கழட்டி எரித்து விட்டார்களாம். சபா ரத்தினத்தை அன்பாக விசாரித்ததைத் தொடர்ந்து, பொட்டு சுரேஷின் ரத்தம் தொய்ந்த பட்டாக்கத்தியை ஒரு கண்மாய் கரையில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து போலீஸிடம் கொடுத்து இருக்கிறான். இது இந்த வழக்குக்கு முக்கியமான தடயமாகக் கருதப்படுகிறது.

பொட்டு சுரேஷைக் கொல்ல ஸ்பாட்டுக்குப் போன ஆட்களுக்கு காமாண்டர் ஆக செயல்பட்டவர் சந்தானம். இவரது இடது கையின் மணிக்கட்டில் கத்திக்காயம் பட்டது. ஏழு தையல் போடப்பட்டதாம். போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது, தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவர் ஒருவரை வரவழைத்து காயத்துக்கு போலீஸாரே மருந்துபோட்டு சிகிச்சை செய்தனராம்.  

யார் இந்த ஆரோக்கிய பிரபு?

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே 'அட்டாக்’ தலைமறைவாகத்தான்  இருக்கிறார். பெரும்பாலான நேரத்தில் 'அட்டாக்’கின் பாடிகார்ட் ஆக இருந்தவர் பிரபு. 'தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்ட சம்ப வத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில்... உருட்டுக்கட்டையை சுழற்றியபடி வீராவேசமாக நடந்து போகிற ஆளைப் பார்க்கலாம். அவர்தான், இந்தப் பிரபு. விஜயபாண்டியின் தோஸ்த். 'வெள்ளைச் சட்டை' பிரபு என்றுதான் மதுரை வட்டாரத்தில் அழைக்கிறார்கள். மதுரையில் உள்ள பிரபு வீட்டுக்கு போலீஸ் போனபோது 30-க்கும் அதிகமான வெள்ளைச் சட்டைகளைக் பார்த்தனர். புல்லட்டில் 'படபட'வெனச் சுற்றுவது ஹாபி. பிரபுவும் அவரது தம்பி பிரவீனும் 'அட்டாக்’ பாண்டி தொடர்புடைய கிரஷர் யூனிட்டை கவனித்துக் கொள்கிறார்கள். பிரவீன் இப்போது தலைமறைவாக இருக்கிறார். இவரின் குடும்பத்தினர் மதுரையில் வசிக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரை பிரபு படித்தது தஞ்சாவூரில். பி.பி.ஏ. படிப்பை பாதியில் விட்டவர். மதுரையில் டுடோரியலில படிக்க வந்தபோது 'அட்டாக்’ கோஷ்டியினருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படியே அடிதடி, பஞ்சாயத்துகளில் 'அட்டாக்’கின் பின்னால் நின்று, கூட்டத்தில் ஏடாகூட அசைவுகள் இருக்கிறதா என்பதைக் கவனிப்பார். சென்னைப் புறநகர் ஏரியாவில் பதுங்கி இருந்த பிரபுவை மதுரை போலீஸ் நெருங்கும் நேரத்தில், அங்கிருந்து எஸ்கேப் ஆகி சேலத்துக்குப் போய் கோர்ட்டில் சரணடைந்தார்.  

'அட்டாக்’ குடும்பத்தில் திடீர் விரிசலா?

பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன், மதுரை கீரைத்துறை ஏரியாவில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில்... 'அட்டாக்’கின் வீடு இருக்கும் ஏரியாவில் ஒரு கார் மீது பெட்ரோலை ஊற்றி முன்பக்கத்தை மட்டும் எரித்தனர். கொஞ்ச நேரத்தில், புல்லட் ஒன்றை அடித்து நொறுக்கினர். அந்தக் கார், 'அட்டாக்’கின் 5-வது அக்கா கலாவின் கணவர் மாரிமுத்துவுக்குச் சொந்தமானது. பைக், 'அட்டாக்’கின் அண்ணன் இருளாண்டிக்குச் சொந்தமானது. இரு தரப்பினரும் மாறி மாறி போலீஸில் புகார் செய்ய... பைக்கை எரித்ததாக நால்வரையும், பைக்கை அடித்து நொறுக்கியதாக நால்வரையும் போலீஸ் கைது செய்தது. ''இது யதேச்சையாக நடந்ததா? அல்லது பொட்டு சுரேஷ் கொலை சமயத்தில் அந்த எட்டு பேரும் ஜெயிலில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதால் திட்டமிட்டு தாக்குதல் நடந்ததா? என்கிற கோணத்தில் தற்போது விசாரித்து வருகிறோம்'' என்கிறது போலீஸ்.  

'அட்டாக்’கின் 4-வது அக்காவான பஞ்சுவின் மகன் திருச்செல்வம், தி.மு.க. ஆட் சிக் காலத்தில் 'அட்டாக்’கின் வலதுகரமாக விளங்கியவர். அதன்பிறகு, திருச்செல்வத்தின் ஆதிக்கம் குறைந்தது. 'அட்டாக்’கின் 5-வது அக் காவின் கணவர் மாரிமுத்து. இந்த இருவரும் 'அட்டாக்’குக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்ட பொட்டு சுரேஷ் அந்த இருவரையும் பயன்படுத்தி 'அட்டாக்’கை கவனிக்கத்  திட்டம் தீட்டி இருந்ததாகவும் சொல்கிறார்கள். இதை எப்படியோ 'அட்டாக்’ ஸ்மெல் செய்து விட்டார். இதுதொடர்பாக எச்சரிக்கும் விதமாக வாகனத் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக அந்த ஏரியாக்காரர்கள் சொல்கிறார்கள்.

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

சப்பாணி முருகனைச் சந்தித்தது ஏன்?

பொட்டு சுரேஷ் கொலையான ஜனவரி 31-ம் தேதியன்று காலை மதுரை ஜே.எம். 4-வது கோர்ட்​டில் நடந்த சம்பவம் இது. மதுரைச் சிறையில் இருக்கும் சப்பாணி முருகன் ஒரு வழக்கு விஷயமாக கோர்ட்டுக்கு வந்தார். மதுரை அருகே உள்ள சில மில்களின் உரிமையாளர்களிடம் இப்பவும் முருகன் பெயரைச் சொன்னாலே பவுசு பல லட்சம் வசூலாகுமாம். அந்த அளவுக்கு முருகனுக்கு இமேஜ் உண்டு. எஸ்.ஐ. கொலை வழக்கு, வழுக்கை முனுசு கொலை, மேட்டூர் அணை ஏரியாவில் நடந்த கொலை உட்பட பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்களில் சப்பாணி முருகன் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது.

சந்தானமும் வேறு சிலரும் முருகனுடன் கோர்ட் வளாகத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்களாம். கொலை சம் பவத்துக்குப் பிறகு சரண் அடைந்த ஆட்களின் படத்தைப் பார்த்த போலீஸார், 'இவனுகதான் முருகனோட கோர்ட்டுல பேசிக்கிட்டிருந்தானுவ. சந்தானம்தான் முக்கியமாகப் பேசியவன்' என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். முருகனுக்கு சட்ட ஆலோசனை தரும் பிரமுகர் ஒருவர், பொட்டு கொலையில் சரண் அடைந்தவர்கள் விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டியது போலீஸுக்கு சந்தேகத்தை அதிகரித்து இருக்கிறது. இதை எல்லாம் வைத்து, பொட்டு சுரேஷ் கொலையில் முருகன் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா? அல்லது வேறு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று ஜெயில் ஏரியாவை உள்ளடக்கிய செல்போன் டவரை செக் செய்து இருக்கிறார்கள். தகவல் பரிமாற்றம் செல்போன் வழியாக நடக்கவில்லை என்று தெரிந்து இருக்கிறது. முருகனை யாராவது நேரில் சந்தித்துப் பேசினார்களா என்று சிறைச்சாலை பதிவேடுகளை துருவுகிறது போலீஸ்.  

பொட்டுவின் கடைசி போன்!  

பொட்டு சுரேஷ் கொலையாவதற்கு சில நொடிகளுக்கு முன், காரில் இருந்தபடியே ஆவேசமாக யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாராம். அந்த நேரம் பார்த்து பொட்டுவின் கார் மீது டூவீலரை கொலையாளிகள் மோத... அதைக்கவனித்த பொட்டு, 'டேய், யாருடா அது?' என்று அதட்டியபோது, செல் போன் பேச்சு கட் ஆகிவிட்டதாம். அதுதான் அவர் பேசிய கடைசிப்பேச்சு. அந்தநேரத்தில், 'பொட்டு' மறுமுனையில் யாருடன் பேசிக்கொண்டு இருந்தார் என்பதை போலீஸ் அவரது செல்போன் எண்களை வைத்து விசாரித்தபோது, உசிலம்பட்டி ஏரியாவைச் சேர்ந்த ஒரு நபர்தான் அவர் என்று தெரிந்திருக்கிறது. கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், உசிலம்பட்டி ஏரியாவுக்குப் போன பொட்டு, அங்கு தங்கி இருந்தாராம். அதன்பிறகுதான், கொடைக்கானலுக்குப் போய் இருக்கிறார் பொட்டு. உசிலம்பட்டியில் ஏதோ சொத்து பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத்தான் பொட்டு வந்தார் என்று உசிலம்பட்டிக்காரர்கள் சொல் கிறார்களாம்.

கடந்த ஒரு மாதத்தில், அசையா - அசையும் சொத்துக்கள் விஷயத்தில் பொட்டு தீவிர கவனம் செலுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கொடைக்கானலுக்குச் சென்றதுகூட இது தொடர்​பாகத்தான் என்கிறார்கள். இந்தக் கோணத்​தையும் போலீஸ் டீம் ஒன்று விசாரிக்கிறது. ''உசிலம்​பட்டி, கொடைக்கானல்... இரண்டு ஊர்களுக்கு பொட்டுவுடன் சென்ற நண்பர்களை விசாரிக்கிறோம். அப்போது எந்தெந்த செல்போன் எண்களுக்கு பொட்டு பேசினார்? யார் யார் இவருடன் தொடர்புகொண்டு பேசினர் என்பது குறித்து தகவல் சேகரிக்கிறோம். பொட்டுவின் பினாமிகள் யாராவது 'அட்டாக்’குடன் கூட்டணி அமைத்து இதில் ஈடுபட்டு இருப்பார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?

என்ன சொல்கிறார் கமிஷனர்?

மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் படு பிஸியாக இருக்கிறார். மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவரிடம் இந்தக் கொலை விசாரணை பற்றிக் கேட்டபோது, ''கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள்தான் கொலை நடந்த ஸ்பாட்டுக்கு வந்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சம்பவம் நடந்த அன்று பிஸியான ரோட்டில் சுரேஷ் சென்ற காரை, கொலைக் கோஷ்டியினர் வேறு ஒரு காரில் பின்தொடர்ந்த காட்சி சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. சுரேஷின் காரில் கிடைத்த சில கைரேகைகள் சரண் அடைந்தவர்களில் இருவருடையது. ஸ்பாட்டில் அவர்கள் விட்டுச் சென்ற செருப்புகள், டூவீலர் பேட்டரி பாக்ஸ் ஒன்று ஆகியவை கிடைத்து உள்ளன. கொலைக்கு பயன்படுத்திய பட்டாக்கத்தியை ஒருவனிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். செல்போன் ட்ராக்... கொலைக்கு முன் - பின் என்று இரு வகையிலும் சேகரித்துள்ளோம். சந்தேகப்படும் நிறைய பேரின் செல்போன் குறித்து விசாரிக்கிறோம். நிச்சயமாக வெகு சீக்கிரமே கொலைக்கு காரணமானவர்களைக் கூண்டோடு பிடிப்போம். பொதுமக்கள் யாராவது சுரேஷ் கொலை தொடர்பாக தகவல் ஏதாவது தெரிந்தால், உடனே சொல்லலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்'' என்றார்.  

கொலைப் பின்னணியில் அரசியல் இருக்கிறதா, அல்லது கோஷ்டி மோதல் மட்டும்தானா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்!

_ ஆர்.பி.

அட்டை மற்றும் படங்கள்: எம்.விஜயகுமார்