Published:Updated:

காரில் வாளுடன் பெண் சப்-இன்ஸ்பெக்டரை துரத்திச் சென்ற கும்பல்: மடக்கிப் பிடித்த ஒடிசா போலீஸ்!

காவல்துறை

ஒடிசா மாநிலத்தில், சப்-இன்ஸ்பெக்டரை காரில் விரட்டிச் சென்று கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

காரில் வாளுடன் பெண் சப்-இன்ஸ்பெக்டரை துரத்திச் சென்ற கும்பல்: மடக்கிப் பிடித்த ஒடிசா போலீஸ்!

ஒடிசா மாநிலத்தில், சப்-இன்ஸ்பெக்டரை காரில் விரட்டிச் சென்று கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
காவல்துறை

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரிலுள்ள மகிளா காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருபவர் சுபாஶ்ரீ. இவர் ஜனவரி 2-ம் தேதி இரவுப் பணி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ காரில் வந்த ஒரு கும்பல் அவரை வேகமாகத் துரத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தே, துரத்தியிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும், துரத்தியவர்கள் காரை மறித்து, வாளைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். மேலும், அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி, கொலைமிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனால் பதற்றமடைந்த பெண் காவலர் சைலன்ஸரை அழுத்தியிருக்கிறார். இந்தச் சத்தத்தைக் கேட்டு சம்பவ இடத்துக்கு சில காவல்துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். உடனே அங்கிருந்த மூவரும் காரில் தப்பிவிட்டார்கள். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையத்தில் புகார் பதிவுசெய்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் காவல்துறை தேடிவந்தது.

போலீஸ்
போலீஸ்

இந்த நிலையில், நேற்று, சம்பவத்தன்று பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் கண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பந்தப்பட்ட மூவரையும் வெவ்வேறு இடங்களில் கைதுசெய்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த மூன்று நபர்களும் டாக்ஸி ஓட்டுநர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.