Published:Updated:

விழுப்புரம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; அண்ணன் உட்பட மூவர் போக்சோவில் கைது!

கைதுசெய்யப்பட்ட மூவர்
News
கைதுசெய்யப்பட்ட மூவர்

11-ம் வகுப்பு பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சிலர் கைதுசெய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தன் தாய், தந்தையை இழந்த நிலையில், பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்துவருகிறார். 10-ம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்த இவர், கடந்த ஒரு வருடமாக பெரியம்மா வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்துவருகிறாராம். இரு தினங்களுக்கு முன்னர் மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் அவர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மாணவி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெரியம்மா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

போக்சோ சட்டம்
போக்சோ சட்டம்

அவர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மாணவிக்கு அண்ணன் முறையான மோகன் (32), மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகிய மூவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மோகன், வெங்கடேசன், இளையராஜா மூன்று பேரையும் கைதுசெய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். இந்த மாணவியை மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜும் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

கைது
கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி தேவராஜிடம் பேசினோம். ``பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை போக்சோவில் கைதுசெய்திருக்கிறோம். தற்போது அந்த மாணவியை ஹோமில் பாதுகாப்பாக வைத்து விசாரித்துவருகிறோம். மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மேலும் சிலர் விரைவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்றார்.