Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுவன்! -குற்றவாளிக்கு 3 மரண தண்டனை விதித்து தீர்ப்பு

குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனை
குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனை

புதுக்கோட்டை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அதோடு, ஆயுள்தண்டனையும் ரூ.20,000 அபராதமும், ஏழு வருடச் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000அபராதமும் விதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் டானிஷ் பட்டேல் (34). கடந்த சில வருடங்களாக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒரு தனியார் கிரஷரில் வேலை பார்த்துவந்தார். கிரஷர் வேலைக்குச் சென்று வரும்போது, ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுவனைப் பற்றி அவருக்குத் தெரியவந்திருக்கிறது. கள்ளம்கபடமற்ற அந்தச் சிறுவனை நோட்டமிட்டு, டூ வீலரில் கடத்திச் சென்ற டானிஷ், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்திருக்கிறார்.

புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை நீதிமன்றம்

ஆசனவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுப் படுகாயமடைந்த அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2019 டிசம்பரில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ, கொலை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று ( 18.02.2021) மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அறிவித்தார்.

அதில், மூன்று போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதோடு, அரசியல் அமைப்புச் சட்டம் 302-ன் கீழ் ஆயுள்தண்டனையும், ரூ.20,000 அபராதமும், சட்டம் 363-ன் கீழ் ஏழு வருடச் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு முதலில் ரூ.6 லட்சமும் தற்போது ரூ.3 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

குற்றவாளி டானிஷ் பட்டேல்
குற்றவாளி டானிஷ் பட்டேல்

இதேபோல், பாலியல் வன்கொடுமை செய்த, ஏம்பலைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியைக் கொன்ற குற்றவாளிக்கும் மூன்ரு மரண தண்டனை விதித்து, அடுத்தடுத்து அதிரடி தீர்ப்பளித்தது, புதுக்கோட்டை நீதிமன்றம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு