Published:Updated:

`10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு!' - விவசாயியை ஏமாற்றியவர்களை 7 வருடம் கழித்து மடக்கிய போலீஸ்

கைதானவர்கள்

கண்ணையனிடம் போனில் பேசிய நபர், 'பரிசுத்தொகையைப் பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும்' என்று கூறி, 9.2 லட்சம் ரூபாயை எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய வங்கிகளிலுள்ள சேமிப்பு கணக்குக்குச் செலுத்தும்படி கூறியுள்ளார்.

`10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு!' - விவசாயியை ஏமாற்றியவர்களை 7 வருடம் கழித்து மடக்கிய போலீஸ்

கண்ணையனிடம் போனில் பேசிய நபர், 'பரிசுத்தொகையைப் பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும்' என்று கூறி, 9.2 லட்சம் ரூபாயை எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய வங்கிகளிலுள்ள சேமிப்பு கணக்குக்குச் செலுத்தும்படி கூறியுள்ளார்.

Published:Updated:
கைதானவர்கள்

`உங்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாகக் கிடைத்திருக்கிறது. அதைப் பெறுவதற்கு ரூ. 9.2 லட்சம் வரி செலுத்த வேண்டும்' என்று குறுஞ்செய்தி மூலம் வலைவிரித்து, கரூர் விவசாயியை ஏமாற்றிய மூன்று டெல்லி இளைஞர்களை கரூர் போலீஸ் கைதுசெய்திருப்பது, பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

கரூர்
கரூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகிலுள்ள சின்னகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது: 54). விவசாயியான இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஆன்லைன் வழியே 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை விழுந்ததாக, போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதோடு, கண்ணையனிடம் போனில் பேசிய நபர், 'பரிசுத்தொகையைப் பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும்' என்று கூறி, 9.2 லட்சம் ரூபாயை எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய வங்கிகளிலுள்ள சேமிப்பு கணக்குக்குச் செலுத்தும்படி கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய கண்ணையன், மர்ம நபர் போனில் சொன்னபடி, வெங்கமேடு லட்சுமி விலாஸ் வங்கிக் கிளை மூலமாக டெல்லியைச் சேர்ந்த முன்வர் நஜார் (வயது 26) என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், சில நாள்களில் பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபர்கள், கண்ணையனிடமிருந்து தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர்.

இதனால், சந்தேகமடைந்த கண்ணையன் இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2014-ம் ஆண்டு புகார் அளித்தார். கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு ஆணை பிறப்பித்தது.

கைதானவர்கள்
கைதானவர்கள்

சென்னை காவல்துறை சி.பி.சி.ஐ.டி இயக்குநர் உத்தரவின்பேரில், இது தொடர்பாக கரூர் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான தனிப்படை போலீஸார், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துள்ளனர். அவர்களின் விசாரணையின் முடிவில், விவசாயி கண்ணையன் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், டெல்லி ரயில்வே ரோடு, ஆசாத்புர், பப்பு பால் கடை தெருவைச் சேர்ந்த முன்வர் நஜார் (26), சொகில் அன்சாரி (24), மகேஷ் (29) ஆகிய மூன்று நபர்களையும், கடந்த ஜூலை 30-ம் தேதி குற்றவாளிகள் என்று உறுதி செய்து, கைதுசெய்தனர். பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீஸார், விமானம் மூலம் மூன்று நபர்களையும் திருச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து, ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான போலீஸார், மேற்படி மூன்று நபர்களையும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல், நீதிபதி ஆர்.சுஜாதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளிகள் மூவரும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் விவசாயி ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை நூதனமாக ஏமாற்றிய மூன்று இளைஞர்களை ஏழு வருடங்கள் கழித்து கரூர் போலீஸார் டெல்லி வரை சென்று பிடித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism