Published:Updated:

சென்னை: ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை! - கொரோனா பயம் காரணமா?

 தற்கொலை
தற்கொலை ( Representational Image )

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையைச் சேர்ந்தவர் டில்லி (74). இவர் அந்தப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி மல்லிகேஸ்வரி (64). இந்தத் தம்பதியினருக்கு நாகேஸ்வரி (38) என்ற மகள் உள்ளார். நாகேஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தநிலையில் சில தினங்களாக டில்லி, மல்லிகேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. அதற்கு அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர். கொரோனாவாக இருக்கலாம் என்ற பயம் டில்லி, அவரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூன்று பேரும் மனவருத்தத்தில் இருந்திருக்கின்றனர்.

சென்னை: அம்மா மீதான பாசத்தால் தற்கொலை செய்த மகன்; கொரோனாவால் விபரீத முடிவை எடுத்த புதுமாப்பிள்ளை

இந்தச் சூழலில் மூன்று பேருக்கும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் இன்று டில்லி வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் பதில் வரவில்லை. பின்னர் இதுகுறித்து டில்லியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வீட்டின் கதவை தட்டிபார்த்தனர். இதையடுத்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை
தற்கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. ஒரு மாதத்தில் கணவரைப் பிரிந்து அவர் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதன்பிறகு விவாகரத்து வழக்கு நடந்திருக்கிறது. நிரந்தர வருமானம் இல்லாததால் மல்லிகேஸ்வரியின் சகோதரர் வெங்கட்ராமன் தயவில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்தச் சூழலில்தான் அவர்கள் மூன்று பேரும் ஒரே அறையில் தனித்தனியாக தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு