Published:Updated:

டெல்லி: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 சிறுமிகள்... 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

பள்ளிச் சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி: கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 சிறுமிகள்... 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

பள்ளிச் சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

கடந்த 6-ம் தேதி டெல்லியின் மஸ்ஜித் மோத் பகுதியில் வசிக்கும் ஒருவர் தன் மகளை காலை 7:30 மணிக்கு ஆண்ட்ரூஸ் கஞ்சில் உள்ள பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், சிறுமி பள்ளியிலிருந்து திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை டெல்லி டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அதன்பின்பே, அன்று ஒரு சிறுமி மட்டுமல்ல அதே பள்ளியைச் சேர்ந்த மேலும் இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

உடனே காவல்துறை வேன் ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள் வாகனத்தில் ஏறவே இல்லை என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனாலும், போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கரோல் பாக் பகுதியில் மூன்று சிறுமிகளும் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே அந்த இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மூன்று சிறுமிகளையும் மீட்டிருக்கிறார்கள்.

மேலும், அந்த சிறுமிகளிடம் விசாரித்ததில், ஒருவர் தங்களை ரோகினி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்குப் பிணைக் கைதிகளாக வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

காவல்துறை ஒரு பிரிவினரை ரோகினி பகுதிக்கு அனுப்பி தேடியதில், குற்றவாளிகள் பெங்காலி லால் சர்மா (45), சந்தீப் (36), ருக்ஸானா (40), ஜோதி (19) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பிரகாஷ் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணையில் பெங்காலி லால் சர்மா, ருக்ஸானாவுடன் சேர்ந்து ஆள் கடத்தல் கும்பலை நடத்தி வந்ததாகவும், சண்டிகரில் சிறுமிகளை விற்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகள்மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ருக்ஸானாவும், ஜோதியும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்மா, சந்தீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.