Published:Updated:

26 பாக்கெட்டுகள்... 46 கிலோ - ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி கைது

கஞ்சா

ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி உட்பட மூவரை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

26 பாக்கெட்டுகள்... 46 கிலோ - ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி கைது

ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி உட்பட மூவரை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கஞ்சா

மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார்   பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம் ஆகியோர்  திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கஞ்சா
கஞ்சா

மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பைகள் அருகே அமர்ந்திருந்த திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 25)  அவர் மனைவி சத்யா (வயது 20), சரபேஸ்வரர் (வயது 19) ஆகியோரை போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, போலீஸார் அவர்களை மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் மூவரும் 23 பாக்கெட்டுகளில் ரூ.10 லட்சம் மதிப்புடைய 46 கிலோ கஞ்சாவைக் கடத்திவந்தது தெரியவந்தது.

கஞ்சா
கஞ்சா

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மூவரையும் கைதுசெய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் அவர்களை மேல்விசாரணைக்காக தஞ்சாவூர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism