Published:Updated:

நாமக்கல்: `ஒரே காரில் பயணம்; பெண்களிடம் நகை பறிப்பு!’ - போதையில் சிக்கிய 3 இளைஞர்கள்

பரமத்தி
பரமத்தி ( நா.ராஜமுருகன் )

சுகந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து, சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்கள் இருவரிடம் உல்லாசமாக இருந்த மூன்று இளைஞர்கள், அந்த பெண்களிடம் நகைகளை பறிக்க, குடிபோதையில் இருந்த அந்த மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நகை பறிப்பு வழக்கில் கைது
நகை பறிப்பு வழக்கில் கைது
நாமக்கல் : முழு ஊரடங்கு; உடலை தகனம் செய்ய மறுத்த மின்மயான நிர்வாகம் - அவதிப்பட்ட உறவினர்கள்

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்த சுகந்தி, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த செல்வி ஆகியோர் தோழிகள். இதில் செல்வியின் கணவர் செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் பைக்கில் பரமத்தி நோக்கி வந்துள்ளனர். அப்போது, நல்லூர்கந்தம்பாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் சாரதி( வயது: 36), திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் மணிகண்டன் (வயது: 31), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது: 36) ஆகிய 3 பேர்களும் சாரதியின் காரில் திண்டுக்கல் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

நகை பறிப்பு வழக்கில் கைது
நகை பறிப்பு வழக்கில் கைது

அவர்கள் காரில் பரமத்தி அருகே வந்த போது, முன்னே பைக்கில் சென்றுகொண்டிருந்த செல்வியை சாரதி பார்த்துள்ளார். செல்விக்கும், சாரதிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாரதி செல்வியை, 'நாங்கள் திண்டுக்கல் செல்கிறோம் நீங்களும் வாருங்கள்' எனக்கூறி செல்வியையும், சுகந்தியையும் காரில் ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் அருகே உள்ள வாடிப்பட்டிக்கு சென்று உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், அங்கு சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேரும் சுகந்தி மற்றும் செல்வியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, மீண்டும் குடிபோதையில் காரில் பரமத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. பரமத்தி வந்ததும், அந்த மூன்று இளைஞர்களும் சுகந்தி மற்றும் செல்வியிடம் இருந்த தோடு மற்றும் மோதிரத்தை பறித்துக் கொண்டு, அவர்களை கீழே இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி இது குறித்து, பரமத்தி காவல் நிலையத்தில், நகைகளை பறித்துக்கொண்டு சென்றவர்களிடம் இருந்து நகைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார்.

நகை பறிப்பு வழக்கில் கைது
நகை பறிப்பு வழக்கில் கைது

அப்படி, சுகந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து, சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் பரமத்தியில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு