Published:Updated:

கடத்தல்.. தலை துண்டிப்பு... - 3 வயதுக் குழந்தை கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ராம் பிரசாத்

ஜார்கண்ட், டாடாநகர் ரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தை காணாமல் போன வழக்கில் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கொலையாளி
கொலையாளி

ஜார்கண்ட மாநிலம் டாடாநகர் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த மூன்று வயதுப் பெண் குழந்தை காணாமல் போனார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்துறையினர் விசாரணையில் இறங்கினர். ரயில்வே நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி இருந்ததால் அந்தக் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளைஞர் ஒருவர் சிறுமியைத் தூக்கிச் செல்வது தெரியவந்தது. குழந்தைகளை கடத்தும் கும்பல்தான் இந்தச் செயலைச் செய்து இருப்பார்கள் எனக் காவல்துறையினர் சந்தேகித்து வந்தனர்.

கடத்தல்.. தலை துண்டிப்பு... - 3 வயதுக் குழந்தை கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சிறுமியைத் தூக்கிச் செல்லும் இளைஞர் குறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் அந்த இளைஞர் ரிங்கு என்பது தெரியவந்தது. குழந்தையைக் கடத்தி கொலை செய்த வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்று சமீபத்தில்தான் ரிங்கு சிறையிலிருந்து வெளியில் வந்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபரை குறித்து தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர். ரிங்கு மற்றும் அவரது கூட்டாளியை திங்கள்கிழமை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் சிறுமி குறித்து விசாரித்தனர். குழந்தை கடத்தும் கும்பலிடம் சிறுமியை விற்று விட்டதாக முதலில் தெரிவித்துள்ளனர். காவலர்களின் கொடுத்த ட்ரீட்மென்டில் பல அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.

சிறுமியைக் கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசிவிட்டதாகக் கூறினார். இதனையடுத்து சிறுமியின் உடலை வீசிய இடத்தை ரிங்கு காவலர்களிடம் காட்டினார். அங்கு சென்ற காவலர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது, குழந்தையின் தலை தணியாக துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டும் தனியாக இருந்தது. நேற்று இரவு சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது
கைது

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், “ ரிங்கு கூறிய இடத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருந்தது. சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் சிறுமியின் தலையைத் துண்டிக்கவில்லை என்கிறார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ரிங்கு கடந்த 2015-ம் ஆண்டு 7 வயது குழந்தையைக் கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்” என்றனர்.