Published:Updated:

2 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள்... அதிரவைக்கும் சேலம் சைபர் க்ரைம் கிராப்!

ஆன்லைன் மோசடி ( Representational Image )

சேலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள் என பலரும் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களின் வலையில் வீழ்ந்து லட்சங்களை பறிகொடுத்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

2 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள்... அதிரவைக்கும் சேலம் சைபர் க்ரைம் கிராப்!

சேலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள் என பலரும் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களின் வலையில் வீழ்ந்து லட்சங்களை பறிகொடுத்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
ஆன்லைன் மோசடி ( Representational Image )

சேலம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. காவல்நிலையங்களில் சைபர் க்ரைம் புகார்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருவதால், சைபர் க்ரைம் போலீஸார் திக்குமுக்காடி வருகின்றனர். இந்த ஆன்லைன் மோசடிகளில் படித்த இளைஞர்கள் அதிக அளவில் பணத்தை இழப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவிக்கிறார்கள். இத்தகைய குற்றச் சம்பவங்களை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் சைபர் க்ரைம் போலீஸார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆன்லைனில் போலியான இணைய தளத்தை உருவாக்கி தரமற்ற பொருள்களை வாங்க வைப்பது, வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் பறிப்பது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவது என பல வகை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆன்லைன் மோசடி பேர்வழிகள், தற்போது பெண்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் புதிய பாணியை கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இத்தகைய குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. சேலம் உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கு சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த லிங்க்-ஐ பயன்படுத்தி உள்ளே சென்றபோது, அவருடைய சுய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. பாரதியும் அதன்படி அந்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பின்பு சேவைக் கட்டணமாக ரூ.78,000 செலுத்த வேண்டும், அப்படி செலுத்தினால் வேலை உறுதியாக கிடைத்துவிடும் என்று பாரதிக்கு காட்டியிருக்கிறது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்
சித்தரிப்புப் படம்

அதில் வந்த அறிவிப்பை நம்பி, தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின்பு அந்த தளத்திலிருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இதனால் பதறிபோன பாரதி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார் இந்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள் என பலரும் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களின் வலையில் வீழ்ந்து லட்சங்களை பறிகொடுத்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``கடந்த 2 மாதகாலமாக சைபர் க்ரைம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. கல்லூரி மாணவர்களுக்கும், என்ஜினீயர்களுக்கும், மருத்துவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பெண்கள் பெயரில் ஆபாச மெசேஜ்கள் வந்திருக்கின்றன. அதை நம்பி பேச தொடங்குபவர்களிடம், ஆசை வார்தைகளைக் கூறி பல வகைகளில் ஏமாற்றி பணம் பறித்திருகின்றனர். முதற்கட்டமாக இந்த சைபர் க்ரைம் குற்றங்களில் வடமாநில கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!