Published:Updated:

ஆந்திரா டு திண்டுக்கல்... 300 கிலோ கஞ்சா..! - அதிரடிகாட்டிய தனிப்பிரிவு போலீஸார்

கஞ்சா
கஞ்சா

வாகன சோதனையின்போது, சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர்கள் குழு, வடமதுரை அருகேயுள்ள தங்கமாபட்டி பிரிவு சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம்
கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம்
கேரளா, பெங்களூருவுக்குக் கடத்தப்படும் கஞ்சா! - தேனியில் சிக்கிய 226 கிலோ

அப்போது, அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. வாகனத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தி (வயது28), சோலைமுத்து (வயது 31), பரணி (வயது 33), யுவராஜ் (வயது 33), ஜெயசங்கர் (வயது 24), ராகவன் (வயது 27), பாண்டியன் (வயது 52) ஆகிய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கஞ்சா
கஞ்சா
சிவகங்கை: காரில் இருந்த 15 பெட்டிகள்! - இரவு ரோந்தில் சிக்கிய 34 கிலோ கஞ்சா

சிறப்பாகச் செயல்பட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா பாராட்டு தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேனி மாவட்டம், வீரபாண்டியில் வாகன சோதனையின்போது 80 கிலோ கஞ்சா பிடிபட்டது. மூவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேனியிலிருந்து திண்டுக்கல் வழியாக, பெங்களூருக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இந்தநிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 300 கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு