Published:Updated:

'என் கணவர் கொலையாளி இல்லை!’

'என் கணவர் கொலையாளி இல்லை!’

'என் கணவர்  கொலையாளி இல்லை!’

'எவன் செஞ்சான்னு எங்களுக்குத் தெரியும்!’  கதிரவன் கொலை... காதுகுத்து ரவிக்குத் தொடர்பா என்று கடந்த ஜூ.வி-யில் வெளியான கட்டுரைத் தொடர்பாக நம்மைத் தொடர்புகொண்டு பேசினார் காதுகுத்து ரவியின் மனைவி பானுமதி. ''கதிரவனுடன் நல்ல நட்புடனே என் கணவர் பழகிவந்தார். கதிரவன் எங்கள் வீட்டுக்கு வந்து பலமுறை உணவு அருந்தி உள்ளார். எனது கணவரும் கதிரவன் வீட்டில் ஒரு பிள்ளையாகவே பழகிவந்தார். இந்த நட்பு எங்களைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். கதிரவனின் மறைவுக்கு நான் அவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தேன். என் கணவர் கொலையாளி என்றால், என்னை அந்த வீட்டுக்குள் அனுமதிப்பார்களா? சிலர் என் கணவருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி, இந்தக் கொலை வழக்கில் அவரைச் சிக்கவைக்க நினைக்கின்றனர். அவருக்கு இரண்டு கைகளும் ஊனம். சாப்பிடும்போதுகூட மூன்று விரலால்தான் சாப்பிட முடியும். அவருக்கும் இந்த கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காவல் துறை உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார்.