Published:Updated:

'நாங்களும் டாக்டர்தான்!'

கொந்தளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்​கும், பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

'பிசியோதெரபிஸ்ட்கள் தங்களது பெயருக்கு முன்னால் 'டாக்டர்’ என்று போடக் கூடாது. அவர்கள் போலி மருத்துவர்கள்’ என்று தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவரான பிரகாசம் பிரச்னையைக் கிளப்ப... 'பிசியோதெரபி மருத்துவர்கள் பற்றி அவதூறு கிளப்பும் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர் பிசியோதெரபிஸ்ட் மருத்து​வர்கள் சங்கத்தினர்.

இந்திய பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் ஆனந்த் நம்மிடம், ''எங்களை டாக்டர் என்று அழைக்கக் கூடாது என்று சொல்வதில் துளியும் நியாயம் இல்லை. மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், டெல்லி என்று தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்​களில் எல்லாம் எங்களை

'நாங்களும் டாக்டர்தான்!'

டாக்டர் என்று அழைக்கிறார்கள். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பிரகாசம் உளறுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மனித உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளைக் குணப்​படுத்துபவருக்கு டாக்டர் என்ற பொதுவான ஒற்றை அடைமொழி இந்த சமூகத்தால் தரப்படு​கிறது. இந்த நிலையில் எங்களை டாக்டர் என்று அழைக்கக் கூடாது என்று டாக்டர் பிரகாசம் சொல்வது என்ன நியாயம்?'' என்று கேட்கிறார்.

இந்திய பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் சங்கத்தின் மண்டலத் தலைவர் செந்தில்குமார், ''பிசியோதெரபியை நாங்கள் நான்கரை வருடங்கள் கல்லூரியிலும் ஆறு மாதங்கள் பிராக்டிஸ் செய்தும்தான் பிசியோ மருத்துவர்கள் ஆகியிருக்கிறோம். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கால அளவுதான் எங்களுக்கு ஆகிறது. மருத்துவமனை ஒழுங்குமுறைச் சட்டத்தில் பிசியோதெரபிஸ்ட்கள் சுதந்திரமாக மருத்துவம் செய்யலாம் என்று மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பிலேயே பிசியோதெரபி அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு ஒரு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆர்த்தோ மருத்துவர்களுக்கும் பிசியோதெரபிஸ்ட்களுக்கும் இடையிலான பிரச்னை. மூட்டு வலி, தசைப் பிடிப்பு போன்றவை ஏற்பட்டால், மக்கள் எங்களிடம்தான் வருகிறார்கள். இதை பிரகாசத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலர் பிரகாசத்தின் பின்னால் இருந்துகொண்டு எங்கள் துறையின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.

'நாங்களும் டாக்டர்தான்!'

இந்திய மருத்துவ அசோசியேஷன் ஒன்றும் அரசாங்கத்தின் அமைப்பு கிடையாது. இந்திய மருத்துவக்

'நாங்களும் டாக்டர்தான்!'

கவுன்சில்தான் அரசாங்​கத்தின் அமைப்பு. அது எம்.பி.பி.எஸ். மருத்துவர்களை மட்டுமே கண்காணிக்கிறது. பிசியோதெரபிஸ்ட்கள், நர்சிங் போன்றவற்​றில் தலையிடும் அதிகாரம் அந்தக் கவுன்சிலுக்கும்கூட இல்லை. பிரகாசம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவருக்கு எங்களது அமைப்பு மூலமாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறோம்'' என்று கொந்தளித்தார்.

இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவ​ரான பிரகாசத்திடம் பேசினோம். ''பிசியோ​தெரபிஸ்ட்கள் டாக்டர் என்று போட அனுமதி கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அவர்கள் டெக்னீஷியன்கள் மட்டுமே. பொதுமக்கள் யாரும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் நாங்கள் இதைச் சொல்கிறோம். மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. பிஸியோதெரபிஸ்ட்களை எங்களுடைய சகோதரர்களாகத்தான் பார்க்கிறேன்'' என்றார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, ''பிசியோதெரபிஸ்ட்கள் டாக்டர் என்று  போட்டுக்கொள்ளலாமா என்பதுபற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இதுபற்றி மெடிக்கல் கவுன்சில் இயக்குனருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.   பிசியோதெரபிஸ்ட்களின் நியாய​மான கோரிக்கைகளை புரட்சித்தலைவி அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என்றார்.

தமிழகம் முழுக்க, பிரகாசத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தினர்.

- செ.திலீபன், வ.விஷ்ணு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு