கடந்த ஜனவரி 25-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து கான்ஸ்டபிள்களை

. மாவோயிஸ்ட்கள் கடத்தினர். அவர்களை மீட்க, சத்தீஸ்கர் அரசு ஐந்து பேர் குழுவை அபுஜ்மாட் காட்டுக்குள் அனுப்பியது!.
அதில் முனைவர் வி.சுரேஷ் என்பரும் ஒருவர். இவர், பி.யூ.சி.எல். அமைப்பின் தமிழகத் தலைவர், வழக்கறிஞர். பாஸ்கோ பிரச்னை, பினாயக் சென் வழக்கு என மனித உரிமை நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பவர். காட்டில் பயணித்து, மாவோயிஸ்ட்களை சந்தித்து, கான்ஸ்டபிள்களை மீட்டு வந்த அனுபவத்தை நம்முடன் சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்!

''கான்ஸ்டபிள்களைப் பிடித்து வைத்திருந்த மாவோயிஸ்ட்கள், 11 அம்சக் கோரிக்கைகளை சத்தீஸ்கர் அரசிடம் முன்வைத்தனர். நக்சலைட்களை விடுவிப்பது, ஆபரேஷன் பசுமை வேட்டையைக் கைவிடுவது, கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி மக்களை விடுவிப்பது போன்றவை அதில் முக்கிய அம்சங்கள்.

ஆனால், அரசிடம் இருந்து இதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை. மேலும், கடத்தப்பட்டவர்கள் கடைநிலைக் காவலர்கள் என்பதால், அவர்களுக்குக் குரல் கொடுக்க உயர் அதிகாரிகளோ, காவல் துறையோ முன்வரவில்லை. கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் தலித்கள், இரண்டு பேர் பழங்குடி வகுப்பினர். மெத்தனமாக இருந்த அரசுக்கு மக்களிடம் எதிர்ப்பு தொடங்கிய பிறகுதான், சத்தீஸ்கர் அரசு, மாவோயிஸ்ட்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், மாவோயிஸ்ட்கள் அதற்கு முன்வரவில்லை. பதிலாக, 'எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு மனித உரிமைக் குழு வர வேண்டும்’ என்று அறிவிக்கவே, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இரவு சத்தீஸ்கர் அரசு எங்களை அழைத்தது.

பி.யூ.சி.எல். அமைப்பின் சார்பாக நான், கவிதா ஸ்ரீவத்ஸவா, மற்றும் பி.யூ.டி.ஆர். அமைப்பின் சார்பாக கௌதம் நவ்லாகா, ஹரிஷ் தவான் ஆகியோரும் அந்தக் குழுவில் இருந்தோம். எங்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் சென்றவர் மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ். 9-ம் தேதி விமானத்தில் டெல்லி சென்று, மறுநாள் காலை சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூர் சென்றோம். அங்கே இருந்து பஸ்த்தார் பகுதிக்குச் சென்றோம்.

கண்களுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த காடு மட்டுமே. கரடுமுரடான பாதைகள், பழுதடைந்த பாலங்கள், பாறைகள், முட்குவியல்கள், காட்டாற்றின் இரைச்சல், வனக் காற்றின் கடும் குளிர்! நாங்கள் எங்கே வரவேண்டும், எப்படி வழி என்பதெல்லாம் மாவோயிஸ்ட்கள் மூலமாக குறுஞ்செய்தியாகவோ, துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டோ, அவ்வப்போது எங்களுக்கு எப்படியோ வந்துசேரும்!

மொத்தம் 48 மணி நேரம்தான் கெடு. அதற்குள் காட்டைவிட்டு நாங்கள் வெளியே வரவில்லை என்றால், காட்டைச் சுற்றி வளைத்திருக்கும் மத்திய ரிசர்வ் படை உள்ளே புகுந்து சுடுவதுதான் அரசின் ஏற்பாடு!

ஆனால், எங்கள் பயண நேரமே 35 மணி நேரம் ஆகிவிட... பயங்கரப் பதற்றம். ஒரு கட்டத்தில் வழிதவறி, எப்படிச் செல்வது என்றே தெரியாமல் போனது. பிறகு எப்படியோ ஒருவர் தென்பட்டார். அவரிடம் விசாரித்துச் சென்றோம். அந்தப் பயணத்தில் நாங்கள் அந்தக் காட்டு வழியில் சந்தித்த ஒரே ஒரு மனிதர் அவர் மட்டும்தான்!'' என்று நிறுத்தியவர், தொடர்ந்தார்.

''இறுதியாக மாவோயிஸ்ட்களின் இடத்தை அடைந்தோம். வீடுகள் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் அங்கே இல்லை. பிளாஸ்டிக் காகிதங்களால் வேயப்பட்ட கூடாரங்கள். காட்டின் மையத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மரங்கள் வெட்டப்பட்டு, ஒரு சிறு மைதானம் தென்பட்டது. அந்த

இடத்தில்தான் ஆலோசனைகள் நடந்தன. சீருடையோ, சேலை அணிந்தவரோ... எல்லோரிடத்திலுமே துப்பாக்கிகள் இருந்தன. அந்தக் கூட்டத்தில் 120 பேர் கொண்ட ஒரு குழு இருந்தது. முதியவர்களும் இருந்தனர். அவர்களிடம் நாங்கள் நீண்ட நேரம் சமாதானம் பேசியதும், அனுப்பச் சம்மதித்தனர்.

மேலும், கடத்தப்பட்ட ஐந்து காவலர்களும் தங்களை அந்தத் தோழர்கள் எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதைத் தெரிவித்தபோது, எங்களுக்கே வியப்பாக இருந்தது. ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்க... உரிய மருந்தை நகரத்தில் இருந்து தருவித்துக் கொடுத்திருந்தனர். அவர்களை மீட்டவுடன், காவல் துறையினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்தினர். அடித்து, உதைத்து, கடத்தப்பட்டவர்களைத் தங்கள் கூலிகளாக மாற்றும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அந்த ஐவரையும் ஊடகங்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம்!'' என்றவர் தொடர்ந்தார்.

''அதிகாரத்துக்கும், அடிமைப்பட்டவர்களுக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. அரசு, எந்தக் கேள்வியும் இல்லாமல் நியாயம் பேசும் எல்லோரையும் நக்சல் என்று சொல்லிச் சுடுவது தவறு. கடந்த இரண்டு மாதங்களில் இந்தப் பகுதியில் மட்டும் 24 என்கவுன்ட்டர்கள்! மாவோயிஸ்ட்கள் கூட்டத்தில் பேசிய ஒரு முதியவரின் வார்த்தைகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. 'கழுத்து திருகப்பட்டு உணவாகும் கோழிக்குக்கூட, இறைச்சி என்ற மதிப்பு இருக்கிறது. எங்களின் மரணத்துக்கு அந்த மதிப்புகூட இல்லை. மனித உயிர் அத்தனை மலிவானதா?’ - அந்தக் கேள்வி இன்னும் என் காதில் ஒலிக்கிறது!'' என்று வேதனைப்படுகிறார் சுரேஷ்.

- ந.வினோத்குமார்

படங்கள் உதவி: வி.சுரேஷ், பி.யூ.சி.எல்.