Published:Updated:

''ஐவிட்னஸ் அடையாளம் காட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை?''

அபர்ணா கொலையில் நிஜ குற்றவாளி யார்?

''ஐவிட்னஸ் அடையாளம் காட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை?''

அபர்ணா கொலையில் நிஜ குற்றவாளி யார்?

Published:Updated:
##~##

ர் அப்பாவிப் பெண்ணின் மரணம் இப்போதுதான் காவல் துறையின் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. முதல்வர் அலுவலகத்துக்கு மனு போட்டு சலித்துப்போனார்கள் அந்தப் பெண்ணின் பெற்றோர். அமைச்சர்கள் யாரைப் பார்த்தாலும் கடிதம் கொடுத்தனர். தமிழக அரசை நம்பாமல் மத்திய அமைச்​சர்களிடமும் கோரிக்கை வைத்தனர். எதுவும் நடக்காத நிலையில்  இறுதியாக நீதிமன்றத்தை நாடினர். இரண்டு வருடத்துக்கு முந்தைய அந்தக் கொலைச் சம்பவத்தை இப்போதுதான் சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணை செய்யத் தொடங்​கியுள்ளது. 

புதுக்கோட்டையில் வசித்த அந்த அப்பாவிப் பெண்ணின் பெயர் அபர்ணா. என்ன நடந்தது அவருக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்தாம் வகுப்பு தேர்வுக்காக அபர்ணா அவரது வீட்டில் 9.3.2011 அன்று படித்துக்கொண்டிருந்தார். அவரது தம்பி நிஷாந்த் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்பா கலைக்குமாருக்கும் அம்மா

''ஐவிட்னஸ் அடையாளம் காட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை?''

ராஜத்துக்கும் பள்ளி ஆசிரியர் பணி. இருவரும் வேலைக்குப் போய்விட்டனர். இந்த நிலையில், காலை 10 மணிக்கு யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்த அபர்ணாவுக்கு எடுத்த எடுப்பிலேயே தலையில் அடி விழ... நிலைதடுமாறினார். சிறுவன் நிஷாந்த், 'அக்கா... அக்கா' என்று கத்தினான். அதற்குள் அபர்ணாவின் வயிற்றில் கத்திக் குத்துகள். ரத்த வெள்ளத்தில் மிதந்த அபர்ணாவின் கழுத்தில் சுருக்குக் கயிறு போட்டு ஃபேனில் மாட்டிவிட்டு, எஸ்கேப் ஆனது கொலைவெறிக் கும்பல். வீட்டில் இருந்த 25 பவுன் நகையும் திருடுபோயின.

இதுதான் அப்போது வெளியான தகவல்!

இது பணத்துக்காக திருடர்கள் சிலர் செய்த கொலை என்று வழக்கை முடிக்கப்பார்த்தனர். ஆனால், அபர்ணாவின் குடும்பத்தினர் இதை நம்பவில்லை. லோக்கல் போலீஸார் மீது சந்தேகம் கிளப்பிய அபர்ணாவின் தந்தை, உயர் நீதி​மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாறியது. கடந்த வாரத்தில் ஒருநாள்... தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவின் ஐ.ஜி-யான மஞ்சுநாதா, புதுக்கோட்டைக்கு விசிட் வந்தார். டி.ஐ.ஜி. ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் புடைசூழ, அபர்ணாவின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அபர்ணாவின் பெற்றோரிடம் பேசியபோது, ''எங்கள் ஏரியாவில் ரௌடித்தனம், கொள்ளைச் சம்பவம் நடத்தி வந்தது ஒரு கும்பல். அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. பிரமுகரின் வாரிசுகள், போலீஸ் அதிகாரியின் வாரிசு ஒருவர் என்று கைகோர்த்து இவற்றைச் செய்துவந்தனர். அவர்களுக்கு கொள்ளை அடிப்பதற்குத் துப்பு கொடுப்பது ஒரு ஆட்டோ டிரைவர். அந்தக் கும்பல்தான் ஆள் இல்லாத நேரம் பார்த்து எங்கள் வீட்டுக்குள் புகுந்து அபர்ணாவைக் கொன்று நகையைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்பது எங்களின் முக்கியச் சந்தேகம். அந்தக் கோஷ்டியினரைக் காப்பாற்ற உள்ளூர் வி.ஐ.பி-கள் முயல்வதாகக் கேள்விப்பட்டோம். தி.மு.க. பிரமு​கரின் வாரிசுக்காக கட்சி வி.ஐ.பி-கள் ஒருபுறம்... அபர்ணாவைத் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோக்காரரை போலீஸ் விசாரணையில் இருந்து காப்பாற்ற அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல் வி.ஐ.பி. இன்னொரு புறம்.. போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவரின் வாரிசு மீது கருணை காட்டும் வகையில் மாவட்ட அளவில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர்... இப்படி முக்கோணக் கூட்டணியினர் எதிர்முனையில் இறங்க... பள்ளி ஆசிரியர்களான நாங்கள் என்னதான் செய்ய முடியும்?'' என்றனர் அழுதபடி.

''ஐவிட்னஸ் அடையாளம் காட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை?''

அபர்ணாவின் பெற்றோர் ஏழு சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

1. குற்றவாளிகள் அணிவகுப்பு பரேடு நடந்தபோது, கொலையின் ஐவிட்னஸ் ஆன, அபர்ணாவின் தம்பி நிஷாந்த் 'அன்று வீட்டுக்கு வந்தவர்கள் இவர்கள்தான்' என்று ஆளும் கட்சிப் பிரமுகரின் வாரிசு, போலீஸ் அதிகாரியின் வாரிசு இருவரையும் அடையாளம் காட்டினான். இதை வீடியோ எடுத்தனர் போலீஸார். அது என்ன ஆனது?

2. சம்பவம் நடந்தபோது, போலீஸ் மோப்ப நாய் ஓடிப்போய் நின்றது அந்த ஆளும் கட்சிப் பிரமுகரின் வாரிசு வீடு அருகேதான். ஏன் அவரை விசாரிக்கவில்லை?

3. ஆலங்குடி கோர்ட்டில் போலிக் குற்ற​வாளிகள் மூன்று பேர் ஆஜரானார்களே? அவர்​களை செட்டப் செய்து அனுப்பியது யார்?

4. கொலை நடந்த அன்று எங்கள் வீட்டுக்குள் போலீஸ் அதிகாரியுடன் இரண்டு உள்ளூர் பிரமுகர்கள் நுழைந்தார்களே? அது ஏன்?

5. அபர்ணாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த அறைக்குள் தி.மு.க-வின் நகராட்சிப் பிரமுகர் ஒருவர் சென்றுவந்தாரே? ஏன்?

6. உள்ளூர் பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து பேச எங்களை அழைத்தாரே? அவருக்கு என்ன ஆர்வம்?

7. ''ஏண்டா... இப்படிச் செய்தே?' என்று ஆட்டோ டிரைவரிடம் நாங்கள் கேட்டபோது, எல்லோர் முன்னிலையிலும் 'என் உயிரை வேணும்னா எடுத்துக்கங்க' என்று சொன்னானே? அதற்கு என்ன அர்த்தம்?

இதற்கெல்லாம் விடை கண்டுபிடித்தால் எங்கள் மகளைக் கொன்றவர்களைப் பிடித்துவிடலாமே?'' என்று கலங்கினர்.  

ஐ.ஜி-யான மஞ்சுநாதாவிடம் அபர்ணாவின் பெற்றோர் எழுப்பும் சந்தேகங்கள் பற்றி கருத்துக் கேட்டோம். ''பண ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலைதான் இது. கொலை நடந்த இடத்தில் கைரேகைகள் சிக்கியுள்ளன. அபர்ணாவின் பெற்றோர் தந்த தகவல்களை விசாரித்து வருகிறோம். கொலைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கான, போதிய ஆதாரங்களைத் திரட்டிக்​கொண்டிருக்கிறோம்'' என்றார்.

உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் உறுதி எடுக்க வேண்டும்.

- ஆர்.பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism