Published:Updated:

நுகர்வெனும் பெரும்பசி

ஜூ.வி. நூலகம்

நுகர்வெனும் பெரும்பசி

ஜூ.வி. நூலகம்

Published:Updated:
##~##

'அறிவியலை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும்போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று சொன்னவர் மகாத்மா காந்தி. வளர்ச்சி என்ற பெயரால் அறிவியலைப் பொருளாதாரப் பூதமாக்கி, சுற்றுச்சூழலைச் சுத்தமாக துடைத்தெறிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், ராமச்சந்திர குஹாவின் இந்தப் புத்தகம் வந்துள்ளது. சுற்றுச்சூழலியலின் கடந்த கால வரலாறு எப்படி இருந்தது, எதிர்காலக் கனவு எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் குஹா. வாழும் வரலாற்று ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் குஹா. அவரது எழுத்துக்களை அதன் செறிவு மாறாமல் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார் போப்பு. 

நிலம், நீர், காற்று, ஆகாயம்... ஆகிய நான்கும் கடந்த 40 ஆண்டுகளாக நாசமாக்கப்பட்டுவிட்டன. நாகரிகம் அடைந்து​வருவதாகவும் வளர்ந்துவருவதாகவும் புள்ளிவிவரங்களின் மூலமாகக் காட்டிக்கொள்கிறோம். ஆனால், இந்த பூமியில் கரும்​புள்ளிகளே அதிகமாக விழுந்துவருகின்றன. மழை பெய்யாமல் போனது மட்டுமல்ல... குளிர் காலத்தில் வெயில் கொளுத்துவதும், நீர்ப்பரப்பு மொத்தமும் வறட்சியாவதும் ஆண்டுதோறும் அதிகமாகிறது. அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நாம் வாழ்க்கையை நகர்த்துவதைத்தான் ராமச்சந்திர குஹா கண்டிக்கிறார். 'மனிதன் சக்திமிக்கவனாக அல்ல; லாபகர மனிதனாக அல்ல; அவன் முழுமையான மனிதனாதல் வேண்டும். நாகரிகமடைதல் என்ற புதிய நாடகத்தில் முக்கியமான பாத்திரம் ஏற்றிருக்க வேண்டும். அதாவது, முதலில் இயந்திரம் உருவாக்கிய வளர்ச்சி விதிகளை நாம் தலைகீழாக்க வேண்டும். கலாசாரத்தின் ஆதி வாழ்க்கையின் மனித வளர்ச்சியின் உலகத்தைத் துருவித் தேட வேண்டும்’ என்கிறார் குஹா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுகர்வெனும் பெரும்பசி

சூழலியல் என்பது ஏதோ சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவான விவகாரம், இப்படியெல்லாம் பேசுவது சிலருக்கு ஃபேஷனாகிவிட்டது என்று சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். அது மேற்கத்திய சமாசாரம் என்று ஒதுக்கவும் செய்கிறார்கள். தமிழகத்தில் பிறந்த காந்தியவாதி ஜே.சி.குமரப்பாவில் இருந்து குஹா தொடங்குகிறார். இந்தியாவில் உருவான சுற்றுச்சூழல் இயக்கத்தில் பெண்கள் வகித்த பாத்திரங்களை வரிசைப்படுத்துகிறார். பெண்கள்மயமாக்கப்படும்போது அது ஒரு கலாசார அம்சமாகப் பரிமளிக்கவும் செய்யும். காந்தியின் சிஷ்யையான மீராபென், தன்னுடைய சூழலியல் அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுக்க... அவர் எந்தத் துரும்பும் கிள்ளிப்போடாமல் இருந்த துரதிஷ்டம்தான் இன்று வரை ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கிறது.  

'இப்போது இயற்கை ஆற்றல் யாருக்கு உரியது என்ற கேள்வி எழுகிறது. காலங்காலமாக இயற்கையில் எடுத்தும் கொடுத்தும் சிதைக்காமல் பெருந்தொகையில் வாழ்ந்து வருவோருக்கா... அல்லது, இயற்கையை வேகமாகச் சுரண்டி நிர்மூலமாக்கிவிட்டுச் செல்வோருக்கா?’ என்று கேட்கிறார் குஹா. புத்தகத்தை முழுமையாக வாசிக்கும்போது இத்தகைய ஏராளமான கேள்விகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism