Published:Updated:

சாமியாகத் தெரிகிறார் நீதிபதி!

கடமலைக்குண்டு வசந்தி கண்ணீர்!

சாமியாகத் தெரிகிறார் நீதிபதி!

கடமலைக்குண்டு வசந்தி கண்ணீர்!

Published:Updated:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்குறித்து நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகள், அறிக்கைகள் ஒரு புறமிருக்க, பெண்களின் பாது காப்பைக் கட்டிக்காக்க வேண்டிய காவல் துறையே தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வசந்தி என்ற அபலைப் பெண்ணை பலாத்காரம் செய்த  சம்பவத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் எழுதியிருந்தோம். அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் உட்பட போலீஸ்காரர்கள் செய்த சித்ரவதைகளை கடந்த 8.7.2012 ஜூ.வி-யில் 'பேய்களைக் கைதுசெய்யுமா?’ எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

சாமியாகத் தெரிகிறார் நீதிபதி!

திருச்சி பெண்கள் மத்தியச் சிறைச்சாலையில் அரசு சிறை மருத்துவர் சந்திரலேகா, வசந்தியைப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாமியாகத் தெரிகிறார் நீதிபதி!

பரிசோதித்து அளித்த மருத்துவ அறிக்கையையும் வெளியிட்டோம். அடுத்ததாக, மதுரை எவிடென்ஸ் அமைப்பின் கதிர்,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கதவுகளைத் தட்டியபோது, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறைக்குக் கட்டளையிட்டார் நீதியரசர் கிருபாகரன். ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தேனி மாவட்ட எஸ்.பி. அபினவு ஆஜராகவும் சம்மன் அனுப்பினார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 5-ம் தேதி, நீதியரசர் கிருபாகரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ''இனி, வசந்தியின் வழக்கை தேனி மாவட்ட போலீஸார் விசாரிக்கக் கூடாது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உடனே மாற்ற வேண்டும். டி.எஸ்.பி-க்கு மேலான தகுதி​யுள்ள பெண் போலீஸ் அதி​காரியால் விசாரிக்கப்பட வேண்டும். புகாரில் உண்மை இருக்கும்​பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார்.

வசந்திக்காக நீதி கேட்டுப் போராடிவரும் மதுரை எவிடென்ஸ் கதிர், ''சம்பவம் நடந்த பிறகு பத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்களோடு பலதரப்பட்ட அதிகாரிகள், தேசியப் பெண்கள் ஆணை​யம், தேசிய மனித உரிமை ஆணையம் என்று அத்தனைத் துறைகளுக்கும் புகார் அனுப்பி​னோம். இப்போது, வசந்திக்காக நீதித் துறை கேள்வி எழுப்​பியுள்ளது. அடுத்து மக்கள் மன்றம், பெண்கள் ஆணை​யம், மனித உரிமை ஆணை​யம் என எல்லாத் தரப்பிலும் வசந்தியின் வழக்கு கொண்டு​செல்லப்படும்'' என்றார்.

பாதிக்கப்பட்ட வசந்தியிடம் பேசினோம். ''நீதிபதியின் உத்தரவு என் காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது. எனக்கு நீதிமன்றம் கோயிலாகவும் நீதிபதி சாமியாகவும் தெரிகிறார்'' என்றார்.

குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதுதான் வரமாக இருக்க முடியும்.

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism