Published:Updated:

'லத்தி' பாண்டியன் பராக் பராக்!

ஒரு டி.எஸ்.பி-யின் வில்லங்க புராணம்

'லத்தி' பாண்டியன் பராக் பராக்!

ஒரு டி.எஸ்.பி-யின் வில்லங்க புராணம்

Published:Updated:
##~##

கிருஷ்ணகிரி டி.எஸ்.பி-யான சந்தான​பாண்டியனை 'லத்தி’ பாண்டியன் என்றுதான் பொதுமக்கள் விளிக்கின்றனர். எல்லாப் பிரச்னையையும் லத்தியால் தீர்க்க முடியும் என்று நினைக்கிறார் சார்! 

கடந்த 2012 மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் கிடைக்காத விரக்தியில், தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலைமறியல் செய்தனர். அப்போது, ஆசிரியை ஒருவரைக் கன்னத்தில் அறைந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் இதே சந்தானபாண்டியன்தான். அதற்காக, கிருஷ்ணகிரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவரின் லேட்டஸ்ட் அதிரடி, கடந்த 8-ம் தேதி கிருஷ்ணகிரியில் நடத்திய லத்திசார்ஜ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'லத்தி' பாண்டியன் பராக் பராக்!

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மேல்சோமார்பேட்டை எனும் இடத்தில் 'அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை கட்டித் தாருங்கள் என்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை’ என்ற வேதனையில் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கே வந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் களத்தில் இறங்கி, பொதுமக்களை லத்தியால் விளாசித் தள்ளினார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய எழுத்தாளரான ஆதவன் தீட்சண்யா, ''டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அப்பாவி மக்களை அடிப்பதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும் ஆர்வம்கொண்டவர். அவர், 1995 காலகட்டத்தில் ஓசூரில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது போராட்டம் தொடர்பான விளக்கக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். சந்தானபாண்டியன் அனுமதி மறுக்க, அவருக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சந்தானபாண்டியன் ஆவேசப்பட்டு என் கன்னத்தில் அறைந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் இன்ஸ்பெக்டராக இருந்தபோது ஒரு சம்பவம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரை சந்தானபாண்டியன் அடித்துவிட்டார். ஆத்திரமடைந்த அந்தக் கட்சியினர், போலீஸாரைத் திருப்பித் தாக்க... பெரிய விவகாரமானது. அப்பவும் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அவரைக் கண்டித்து திருமாவளவன், ஆத்தூரில் பெரிய கண்டனக் கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.

'லத்தி' பாண்டியன் பராக் பராக்!

அவர் மீது இதுவரை பெரிய அளவில் துறைரீதியான எந்த நடவடிக்கையும் இல்லை. இவரைப் போன்ற சிலரால்தான் காவல் துறை மீது பொதுமக்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது'' என்று வருத்தப்பட்டார். ஆதவன் தீட்சண்யா சொல்வது மாதிரியே பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.  

'லத்தி' பாண்டியன் பராக் பராக்!

டி.எஸ்.பி-யான சந்தானபாண்டியனிடம் இதுபற்றி கேட்டோம். ''தர்மபுரியில் நடந்தது தடியடிப் பிரயோகமே கிடையாது. நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் எனப் பலரும் மறியலில் சிக்கித் தவித்தனர். அவர்களுக்கு வழி விடும்படி மறியல் செய்தவர்களிடம் பேசிப் பார்த்தோம். பெண்களில் பலர் அதைக் கேட்டு விலகிவிட்டனர். ஆனால், ஒரு சிலர் மட்டும் விடாப்பிடியாக சாலையை மறித்தனர். அதனால், அவர்களை விலகிப்போகச் செய்யத்தான் விரட்டினோமே தவிர, தடியடி நடத்தவில்லை. தடியடி நடந்திருந்தால், யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்க வேண்டுமே. என்னைப் பிடிக்காத சிலர், என்னுடைய எல்லா நடவடிக்கையையும் தவறாக விமர்சனம் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?'' என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

- எஸ்.ராஜாசெல்லம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism