Published:Updated:

சாவதை விட ஜெயிலுக்குப் போகலாம்!

கடலில் சிக்கித் தவித்த மாலுமிகள்

சாவதை விட ஜெயிலுக்குப் போகலாம்!

கடலில் சிக்கித் தவித்த மாலுமிகள்

Published:Updated:
##~##

ப்பலில் வேலை... லட்சங்களில் சம்பளம்.... உலகத்தையே சுற்றி வரலாம்... என்ற கவர்ச்சி, மாலுமி வேலைக்கு உண்டு. அதன் இன்னொரு பக்கம் எத்தனை அபாயகரமானது தெரியுமா? அப்படிப்பட்ட துயரத்தில் சிக்கிய 14 மாலுமிகளின் கதை இது. 

கடந்த 2010-ம் ஆண்டு... கொல்கத்தாவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் சரக்குகளை, சீனாவில் செயல்பட்டுவரும் நிறுவனத்துக்காக கொரியாவைச் சேர்ந்த ஓ.எஸ்.எம். அரீனா கப்பல் கொண்டு​சென்றது. 'சொன்னபடி சரக்கை எங்களிடம் ஒப்படைக்கவில்லை’ என்று கூறிய சீன நிறுவனம், கொல்கத்தா நிறுவனத்துக்குப் பணம் கொடுக்க மறுத்தது. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படக் காரணமான அந்தக் கப்பல் இந்திய எல்லைக்குள் வந்தால், சிறைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாவதை விட ஜெயிலுக்குப் போகலாம்!

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்த அரீனா கப்பல், நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை துறைமுகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது. அப்போது தொடங்கிய பிரச்னை இன்னமும் முடியவில்லை.

கப்பல் சிப்பந்திகள் நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீகுமார்

சாவதை விட ஜெயிலுக்குப் போகலாம்!

நடந்த விவரங்களைச் சொல்கிறார். ''2011-ம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்ட இந்தக் கப்பலின் மாலுமிகள் உணவுப் பொருட்கள் காலியானதும், எங்களைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை சப்ளை செய்தோம். ஒரு கட்டத்துக்கு மேல் எங்களா​லும் தொடர்ந்து உணவுப் பொருட்களை அனுப்ப முடியாத சூழ்நிலை.

இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரத் துறைமுக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். துறைமுகமே கப்பலை விற்க​லாம்; கிடைக்கும் பணத்தைக் கொல்கத்தா நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டு, மாலுமிகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காக டெண்ட​ரும் விடப்பட்டது. 20 கோடி ரூபாய்க்கு கப்பல் ஏலம் போனது. ஆனால், 'இந்தத் தொகை எங்களின் நஷ்டத்தை ஈடுகட்டப் போதாது. எனவே, இந்த விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கொல்கத்தா நிறுவனம், அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியது.

அதையடுத்து, கொரிய நாட்டுத் தூதர​கத்தைத் தொடர்புகொண்டோம். அவர்கள் தங்கள் நாட்டு

சாவதை விட ஜெயிலுக்குப் போகலாம்!

மாலுமிகளைத் திரும்ப அழைத்துக்​கொண்டனர். கடலில் நிற்கும் கப்பல் பாதுகாப்புக்குக் குறைந்தபட்ச மாலுமிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதனால், மியான்மரைச் சேர்ந்த மாலுமிகள் சிலரை கப்பல் நிறுவனம் அனுப்​பியது. கடந்த 3-ம் தேதியோடு கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன.

இதையடுத்து, மாலுமிகளுக்கும் கப்பல் கேப்ட​னுக்கும் தகராறு ஏற்பட்டது. பயந்துபோன கேப்டன், மீன்பிடிப் படகு ஒன்றைப் பிடித்து, எங்கள் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற மாலுமிகளும் கரைக்கு வந்துவிட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். பிரச்னையைக் கேட்ட நீதிமன்றம், தற்காலிகமாக கப்பல் சிப்பந்திகள் கிளப்பில் அடைக்கலம் கொடுக்க உத்தரவிட்டது. இதுவும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

கப்பல் கேப்டன் யெத்திகாவிடம் பேசினோம். ''பல நாட்களாக கப்பலில் ஒரு சொட்டுக் குடிநீர் இல்லை. தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. இப்படி நடுக்கடலில் யாருக்கும் தெரியாமல் சாவதைவிட, ஜெயிலுக்குப் போயாவது உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்றுதான் கப்பலைவிட்டு வெளியேறி னோம். எங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்திய அரசு இதை உணர்ந்து, எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறோம்'' என்றார்.

அவர்களின் நம்பிக்கை வீண் போகக் கூடாது.

- ஜோ.ஸ்டாலின்

படங்கள்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism