''அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவது ஆரோக்கியமற்ற நிலை. இதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது''- இப்படி, அரசு அதிகாரத்தின் தலையில் தனது சுத்தியால் தட்டியிருப்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

நீதிபதியின் இந்தக் கடுமையான வார்த்தைகளுக்குக் காரணமான வழக்கு எது?

காஞ்சிபுரம் மாவட்டம், வடநெமிலி கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் 2011-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ''வடநெமிலி கிராம மக்கள் பயன்பாட்டில் இருந்த 9.6 ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்து விட்டனர். அவர்கள் அப்போது காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த பிரதிப் யாதவ், சென்னை புறநகர் காவல் துறை ஆணையராக இருந்த ஜாங்கிட் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள். அதனால்தான் எங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்குதான், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனின் அந்தக் காட்டமான வார்த்தைகளுடன் கூடிய தீர்ப்புக்குக் காரணம். கடந்த 18-ம் தேதி நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியின் முன் அரசுத் தரப்பில் ஆஜரான, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, 'குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அரசு உயரதிகாரிகள் மீதும் லஞ்ச ஓழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. என்னுடைய இந்த உறுதிமொழியை நீதிமன்றம் பதிவுசெய்து கொள்ளட்டும்’ என்று முறையிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன் பின்வருமாறு தீர்ப்பளித்தார்.

''நீ என்ன பெரிய ஜில்லா கலெக்டரா? என்ற வாசகம், தங்களை அதிகாரமிக்கப் பெரிய மனிதராகக் காட்டிக் கொள்பவர்களைப் பார்த்து எளிய மக்கள் கேட்கும் கேள்வி. கலெக்டர் பதவி என்பது அத்தனை மதிப்பும் செல்வாக்கும் படைத்தது. ஆனால், கலெக்டர் பதவியிலும் காவல் துறையின் உயர் பதவியிலும் இருந்தவர்கள் மீது இந்த வழக்கில் கவலையளிக்கக்கூடிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது, தொடர்ந்து புகார்கள் வரும் ஆரோக்கியமற்ற சூழலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

மனுதாரர் கூற்றுப்படி, வடநெமிலி கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள 9.6 ஏக்கர் நிலம் தம்புராம் என்பவருக்குச் சொந்தமானது. அந்த இடத்தையும் அதில் உள்ள இரண்டு கிணறுகளையும் இரண்டு கோயில்களையும் வடநெமிலி கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இதுவரைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால், 2007-ம் ஆண்டு ரவிச்சந்திரன், சந்திரசேகர் என்பவர்கள் அந்த நிலத்தை ராஜாமணி நாடார் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து தாங்கள் வாங்கி விட்டதாகக் கூறி, அந்த இடத்தை கிராம மக்கள் பயன்படுத்தத் தடை ஏற்படுத்தி உள்ளனர். இதையடுத்து, வடநெமிலி கிராம மக்கள் ஆவணங்களை சரிபார்த்தபோது ராஜாமணி நாடாரின் சொத்துப் பட்டியலில் சர்ச்சைக்குரிய நிலம் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால், அவரது வாரிசுகளிடம் இருந்து எதிர்மனுதாரர்கள் அந்த நிலத்தை எப்படி வாங்கியிருக்க முடியும்?

மேலும், எதிர்மனுதாரர்கள் வடநெமிலியில் உரிமை கொண்டாடும் நிலத்துக்கு அவர்கள் அளிக்கும் ஆவணங்கள் முறையாக இல்லை. அவர்கள் ஆறு ஏக்கர் நிலத்துக்கு ஆவணங்களைக் காண்பிக்கிறார்கள். ஆனால், கிராமத்துக்கு சொந்தமான 9.6 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இதுவே அவர்கள் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு சாட்சியாகிறது.

மேலும், எதிர்மனுதாரர்களுக்கு சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்கிக் கொடுத்த நிலத்தரகர் குமார் என்பவர்

வடநெமிலி கிராம சபை முன்பு ஆஜராகி, சர்ச்சைக்குரிய 9.6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்கள் கலெக்டர் பிரதிப் யாதவ் மற்றும் காவல் துறை ஆணையர் ஜாங்கிட்டின் பினாமிகள் என்றும், கிராமத்துக்குச் சொந்தமான நிலத்தை அவர்களுக்குத் தான் வாங்கிக் கொடுத்தது தவறுதான் என்றும் ஒப்புக்கொண்டு எழுதி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார். அதையும் மனுதாரர் நீதிமன்றத்தின் முன் சமர்பித்துள்ளார்.

மேலும், இரண்டு அரசு உயரதிகாரிகளின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கில் இதுவரை, நேர்மையான விசாரணை நடைபெறவில்லை என்று இந்த நீதிமன்றத்தை நாடி கிராம மக்கள் சார்பில் காவல் துறையிலும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் கொடுத்த புகாரை மறுவிசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் அரசுத் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியை, அரசாங்கம் எவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்ற வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?

- ஜோ.ஸ்டாலின்

படங்கள்: ஜெயவேல்