கோடை வந்தால் குடிநீரின் தேவையும் அதிகரிக்கும். அதனால் குடிநீர் பஞ்சமும் ஏற்படும். தென் மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. பாட்டில் தண்ணீரின் விலையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் விற்கப்பட்ட குடிநீரின் மொத்த மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். அதில் தமிழ்நாட்டின் விற்பனை 5,000 கோடி ரூபாய். உச்ச நீதிமன்றம் 1990-களில், குடிக்கும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கக் கூடாது என்றும் பாட்டில்கள் மீது மினரல் வாட்டர் என எழுதக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. யாரும் இதைப் பின்பற்றுவதில்லை.

இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் விருதை காந்தி, ''உலகத்தில் உள்ள இரண்டுசதவிகிதம் நீர் மட்டும்தான் நாம் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் உகந்ததாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள குடிநீரின் மீது பன்னாட்டு கம்பெனிகள் இப்போது குறிவைத்துள்ளன. இந்தியாவை நோக்கி தண்ணீர் வியாபாரிகள் படையெடுக்கின்றனர். இங்கு குடிநீரில் வன்முறை, வணிகச் சுரண்டல் அதிகமாகிவிட்டது. தமிழகத் தென் மாவட்டத்தின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியில் பன்னாட்டு கம்பெனிகள் தண்ணீரை உறிஞ்சியெடுக்கின்றன. காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை எனத் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் ஓடைகளிலும் மணலை அதிகமாக அள்ளிவிட்டோம். மழைக் காலங்களில் தண்ணீர் நிலத்தில் உறிஞ்சப்படாததால் நீர் கடலில் வீணாகக் கலந்துவிடுகிறது. பிறகு, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் வகுக்கிறோம்.

தமிழகத்திலுள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தன் வேலையைச் சரியாகச் செய்யாததால்

தொழிற்சாலைகளின் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து குரோமியத்தின் அளவு அதிகரித்துவருகிறது. இதனால் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களின் பல இடங்களில் தண்ணீர் குடிக்க முடியாதபடி மாறிவருகிறது. அதோடு, அந்தக் குடிநீரை அருந்தியவர்கள் கிட்னி, சிறுநீரகம், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நகரத்தில் உள்ள சாக்கடைகள், தோல் கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் அனைத்தும் ஆற்றில் கலப்பதால், ஆறுகள் பிளாஸ்டிக் குப்பைக்கூடங்களாக மாறிவிட்டன. குடிக்கும் தண்ணீரால் மரணம் ஏற்படுவதும் அதிகரித்து விட்டது. சமீபத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாறு ஆற்றில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் சாக்கடை கழிவு கலந்ததால், ஐந்து பேர் இறந்துவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் போன்ற பகுதிகளில் நைட்ரேட், ஃப்ளோரைடு போன்ற அமிலங்கள் தண்ணீரில் அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்களின் பற்கள் கரையாகி, எலும்புகள் பலவீனமாகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில குழந்தைகள் நீல நிறத்தில் பிறக்கின்றன. நிறையப் பேர் கிட்னியில் கல் உருவாகி கடும் அவதிப்படுகின்றனர். நிலத்தடி நீர் உறிஞ்சுவதைத் தடுக்கும் சட்டம் இருந்தும் அது அமலுக்கு வராதது வேதனையானது.

தண்ணீர் என்பது இயற்கை கொடுத்துள்ள பொதுச் சொத்து. அதை கேன்களில் அடைத்து ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். 25 லிட்டர் கேன்களாக விற்கிறார்கள். இதைப் போன்ற கேவலம் எதுவும் கிடையாது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் உள்ளன. இவை பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்பதுதான் வேதனை. மரம் வளர்த்தல், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் போன்றவற்றால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க முடியும். இல்லையென்றால் வருங்காலச் சந்ததியினரைக் குடிநீருக்காக அலையவிடுகிற அவலத்துக்குக் காரணமாகிவிடுவோம்'' என எச்சரித்தார்.

மக்களே உஷார்!

- சண்.சரவணக்குமார்