Published:Updated:

சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப்பதிவேடு அளித்தவர் பெயரை தெரிவிக்க பிரசாந்த் பூஷண் மறுப்பு!

Vikatan Correspondent

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப் பதிவேடு அளித்தவர் பெயரை தெரிவித்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவை சந்தித்து பேசியதாகவும், இதனால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், ரஞ்சித் சின்காவை சி.பி.ஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், சி.பி.ஐ இயக்குநரை யார், யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்த சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப் பதிவேட்டையும் தாக்கல் செய்தார்.

இதனிடையே, சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப் பதிவேட்டை தந்தவரின் பெயரை தெரிவிக்குமாறு பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப் பதிவேடு தந்தவரின் பெயரை தெரிவிக்க பிரசாந்த் பூஷண் மறுத்துவிட்டார்.

சி.பி.ஐ இயக்குநரின் இல்ல வருகைப் பதிவேடு அளித்தவர் விவரத்தை தெரிவித்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.