Published:Updated:

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

Published:Updated:
##~##

த்திய அரசின் புதிய மருந்துக் கொள்கை, மருந்து வணிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் மருந்துகளின் விலை முரண்பாடு தொடர்​பான வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சொடுக்கியது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, புதிய மருந்துக் கொள்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்தக் கொள்கையில் உள்ள குளறுபடிகள்தான், மருந்து வணிகர்களின் கொந்தளிப்புக்கான காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 10-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் திரண்டனர்.

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

இதுகுறித்து, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.கே. செல்வன், ''சுமார் 600

போர்க் கொடி தூக்கும் மருந்து வணிகர்கள்!

வகையான மருந்து வகைகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு 'கன்ட்ரோல்டு கேட்டகிரி’, 'டிகன்ட்ரோல்டு கேட்டகிரி’ என இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. கன்ட்ரோல்டு கேட்டகிரியில், 74 வகையான மருந்துகள் இருந்தன. இந்த மருந்துகளின் விலையை நிர்ணயம்செய்வது மத்திய அரசு.  'டிகன்ட்ரோல்டு கேட்டகிரி’யில் உள்ள மருந்துகளின் விலையைத் தயாரிப்பாளர்களும், அகில இந்திய மருந்து வணிக சங்கமும் சேர்ந்து நிர்ணயிக்கும். கன்ட்ரோல்டு கேட்டகிரியில் மருந்து வணிகர்களுக்கு 16 சதவிகித லாபம் கிடைக்கும். டிகன்ட்ரோல்டு கேட்டகிரியில் 20 சதவிகித லாபம். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய மருந்துக் கொள்கை மேலும் 274 மருந்துகளை, டிகன்ரோல்டு கேட்டகிரியில் இருந்து கன்ட்ரோல்டு கேட்டகிரிக்கு மாற்றியுள்ளது. இதனால் இந்த மருந்துகளும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது சரிதான். ஆனால், அந்த மருந்துகளுக்கு எங்களுக்கு 16 சதவிகித லாபம்தான் கிடைக்கும். எங்கள் லாபத்தில் முக்கால்வாசி அந்த 274 வகை மருந்துகளின் மூலம்தான் கிடைத்துவந்தது. இதனால் ஒட்டுமொத்த மருந்து வணிகர்களும் பாதிப்புக்குள்ளாவோம். மேலும் மருந்துக் கட்டுப்பாடுச் சட்டத்தில் கடுமையான விஷயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு மருந்து ஆய்வாளர் சோதனைக்கு வரும்போது அந்தக் கடையில் மருந்துஆளுநர் இல்லை என்றால், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கலாம் என்று கூறியுள்ளனர். மருந்துஆளுநர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்தால்கூட, இதுதான் தண்டனை. கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் தளர்த்த வேண்டும்'' என்றார்.

சேவையா... லாபமா?

- தி.கோபிவிஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism