Published:Updated:

சினிமா கூட்டுறவு சங்கத்தில் பிரிவினை!

காணாமல் போன 3 கோடி ரூபாய்

சினிமா கூட்டுறவு சங்கத்தில் பிரிவினை!

காணாமல் போன 3 கோடி ரூபாய்

Published:Updated:
##~##

டந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்​துக்​கான (ஃபெப்சி) கூட்டுறவு சங்கத் தேர்தலில் மொத்தம் 11 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்​கப்பட்டனர். அதில் ஒன்பது பேர் திரைப்பட டிரைவர் சங்கத்தின் தலைவராக இருக்கும் செந்தில்குமாரைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவ​ராகத் தேர்வுசெய்தனர். 

செந்தில்குமார் தலைவராகப் பதவியேற்றதும். வரவு செலவுக்​கான புத்தகம் தரப்பட்டது. புத்தகத்தில் ஃபெப்சி தொழிலாளர்களின் லட்சக் கணக்கான பணம் கணக்கில் வராமல்போனது கண்டு அதிர்ந்துபோனார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடந்த விஷயங்களை நம்மிடம் விவரித்தார் செந்தில்குமார்.

சினிமா கூட்டுறவு சங்கத்தில் பிரிவினை!

''கருணாநிதி ஆட்சியில் பையனூரில் தரப்பட்ட வீட்டு நிலத்துக்காக ஃபெப்சி தொழிலாளர்கள் 2,053 பேர் தலா ரூ.3,110 வீதம் பணம் செலுத்தினர். அந்த 63,84,830 ரூபாய் பணத்தைத்தான் காணவில்லை. பணம் எங்கே என்று அப்போது தலைவராக இருந்த வி.சி.குகநாதனிடம் கேட்டேன். 'அந்தப் பணத்தை ஃபெப்சி ட்ரஸ்ட்டில் போட்டுவிட்டேன்’ என்று கையை விரிக்கிறார். இதுதவிர, கருணாநிதி முதல்வராக இருந்தபோது 'பாசக்காரத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ நிகழ்ச்சியை வி.சி.குகநாதனும் 'ஃபெப்சி’ சிவாவும் சேர்ந்து நடத்தினர். அப்போது வைரமுத்து 10 லட்சம், தாணு 5 லட்சம் என சினிமா பிரமுகர்களிடம் 2 கோடி ரூபாய் வசூலித்தனர். ரஜினி, கமல் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியை தனியார் டி.வி-க்கு இரண்டரைக் கோடி ரூபாய்க்கு விற்றனர். மொத்தம் நாலரைக் கோடி ரூபாய் ஃபெப்சி அக்கவுன்டில் போடப்பட்டது. இப்போது அந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது, பாக்கி மூன்றரைக் கோடி ரூபாய் எங்கே போனது?

ஃபெப்சியில் 23 அமைப்புகளில் இருக்கும் சிலரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்வது சிவாவின் வழக்கம். ஏற்கெனவே லைட்மேன் சங்கச் செயலாளராக இருந்த ஒருவர் 30 லட்சம் ரூபாய் மோசடிசெய்து கைதானார். இப்போது அந்த நபருக்கு  ஃபெப்சியில் பொறுப்பு கொடுத்து அருகில் வைத்திருக்கிறார்.

சினிமா கூட்டுறவு சங்கத்தில் பிரிவினை!

சிவாவுக்கும் டிரைவர் சங்கத்துக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம். டிரைவர் சங்கத்தை ஃபெப்சியில் இருந்தே நீக்கி​விட்டார். கடந்த முறை நடந்த ஃபெப்சி தேர்தலில் சிவா இரண்டே வாக்கு வித்தி​யாசத்தில்தான் ஜெயித்தார். டிரைவர் சங்கத்தில் இருக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஓட்டு போட்டிருந்தால், சிவா தோற்றுப்போயிருப்பார்'' என்றார் ஆவேசமாக.

இயக்குனர் வி.சி.குகநாதனிடம் விளக்கம் கேட்டோம்.

சினிமா கூட்டுறவு சங்கத்தில் பிரிவினை!

''ஃபெப்சி தொழிலாளர் வீட்டுமனை அபிவிருத்திக்​காக 63 லட்ச ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது. அதில் 28 லட்ச ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. இப்போது வங்கிக் கணக்கில் தொழிலாளர்கள் பணம் இருக்கிறது. 'பாசக்காரத் தலைவனுக்குப் பாராட்டு விழா’-வை நடத்தியது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்தான். அதன் வரவு செலவுக் கணக்கை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அதன்பிறகு, ஃபெப்சி தனியாக மூன்று நாள் நடத்திய விழா நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை தனியார் டி.வி. இரண்டரைக் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த இரண்டரை வருஷமாக நான் ஃபெப்சி அமைப்பின் பதவியில் இல்லை. அதனால், அந்தப் பணம் பற்றிய வரவு செலவுக் கணக்குகள் செயலாளர் சிவாவிடமும் பொருளாளரிடமும்தான் இருக்கின்றன'' என்றார்.

பொதுச் செயலாளர் ஃபெப்சி சிவாவிடம் பேசினோம். ''நாங்கள் ஏற்கெனவே டிரைவர் சங்கத்தை ஃபெப்சி அமைப்பில் இருந்து நீக்கிவிட்டோம். நீக்கப்பட்டவர் தேவையில்லாமல் பிரச்னைசெய்கிறார். குகநாதன் தலைவராக இருந்தபோது, ஃபெப்சி நடத்திய விழாப் பணத்தில் பையனூரில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு கட்டடம் கட்டியிருக்கிறார். மீதிப் பணத்துக்கான வரவு செலவு விவரத்தை அவரே புத்தகமாக வெளியிட்டுள்ளார்'' என்றார்.

ஃபெப்சி அமைப்பின் தலைவர் அமீரிடம் பேசினோம். ''ஃபெப்சி அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்குமார் எப்படி 23 அமைப்பு​களுக்கும் பொதுவான சொசைட்டியின் தலை​வராகச் செயல்பட முடியும்? கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. சம்மேளன சங்கங்களின் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சொசைட்டி சங்கத் தலைவராக இருந்தால்தான், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உதவிகள் செய்ய முடியும். அதனால் கூட்டுறவு சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்'' என்றார்.

கூட்டுறவில் இத்தனை குளறுபடிகளா?

- எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism