Published:Updated:

சாரதா நிறுவன மோசடி: முன்னாள் டிஜிபி வீட்டில் சோதனை செய்த சிபிஐ மீது வழக்கு பதிவு!

Vikatan Correspondent

புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் அசாம் முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பிரசாத் பருவா வீட்டில் சோதனை செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் சாரதா நிறுவனத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியதாக முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பிரசாத் பருவா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரது வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் சோதனையிட்டனர். மேலும், அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், சங்கர் பிரசாத் பருவா, தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு  தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா வீட்டில் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.